பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116


வன் தொடர்க் குற்றியலுகர ஈற்று வினையெச்சங் கட்கு முன் வரும் வல்லினம் மிகும். பிடித்து + கொண்டான் - பிடித்துக்கொண்டான் விற்று - சென்ருன் = விற்றுச் சென்ருன் நிகழ்கால வினையெச்சத்திற்கு முன்னும் அகர ஈற்றுக் குறிப்பு வினையெச்சத்திற்கு முன்னும் வரும் வல்லினம் மிகும். செய்யப் போனன் - இது நிகழ் கால வினையெச்சம் வலியப் போனுன் - இது குறிப்பு வினையெச்சம் இகர ஈற்று இறந்தகா ல வினையெச்சத்திற்கு முன்னும், யகர ஈற்று இறந்த கால வினையெச்சத்திற்கு முன்னும் வரும் வல்லினம் மிகும். ஆடி + குதித்தான் = ஆடிக் குதித்தான் -இகர ஈறு போய் + படித்தான் = போய்ப் படித்தான் i -யகர ஈறு இரண்டாம் வேற்றுமைக்கும் நான்காம் வேற்று மைக்கும் முன்வரும் வல்லினம் மிகும். மரத்தை-பிடித்தான் = மரத்தைப் பிடித்தான் - இரண்டாம் வேற்றுமை எலிக்கு - பகை = எலிக்குப் பகை -நான்காம் வேற்றுமை மிகா இடங்கள் நெடிற்ருெடர், உயிர்த் தொடர், இடைத் தொடர், ஆய்தத் தொடர்க் குற்றியலுகரத்திற்கு முன் வ ரு ம் வல்லெழுத்துக்கள் மிகா.