பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128


செந்நிலவுக் கழகம் ஏற்பட்டது. இதை ஏற் படுத்திய நாடுகள் துருக்கியும் எகிப்துமாகும். செம் பரிதிக் கழகம் ஒன்று தோன்றியது. அதை ஆதரித்த வர்கள் பெர்சியர்களாவர். கானடாவைச் ேச ர் ந் த கியூபெக்கு நகரத்தார் செஞ்சிலுவைச் சங்கத்தைக் கண்டனர். இம்மூன்றும் ஒரே நோக்கமுடையவை கள்தான். 1925-ம் ஆண்டு நம் இந்தியாவிலும் இக் கழகம் தோன்றியது. இப்பொழுது இதன் தலைமைக் காரியாலயம் புது டெல்லியில் இருக்கிறது. இதன் நோக்கங்களாவன:- (1) உலக ஒற்று மைக்கு உழைத்தல் (2) மக்களிடை நல்லொழுக்கங்களை நாட்டல் (3) சுயநலம் இன்றி பிறர்க்குத் தம்மாலான உதவி செய்தல் (4) நோயாளிகளுக்கு முதல் உதவி செய்தல் முதலியனவாம். இது கால் இக்கழகம் ஏழைப் பிள்ளைகளுக்கு அன்னம், ஆடை கொடுத்து உதவுகிறது. வைசூரி, பிளேக்கு முதலிய கொள்ளை நோய் உண்டாகும் காலங் களில் மக்களுக்குப் பலவிதத்தில் உதவி செய்கிறது. போரில் காயப்பட்டவர்களுக்குச் சிகிச்சை செய்கிறது. பூகம்பம், புயல் ஏற்பட்ட பகுதிகளில் சென்று திக்கற்ற வர்கட்குப் பேருதவி செய்கிறது. இதில் முக்கியமாக ஆசிரியர்களும் மாணவர் களுமே பெரும் பங்கு கொண்டுள்ளனர். பிறர் நலம் பேணும் பெரியார் யாவர்க்கும் இதில் சேர உரிமை யுண்டு. பணக்காரர்கள் இதில் பங்கெடுத்து ஊக்க முடன் உழைத்து இக்கழகத்தை நீடு வாழச் செய் வார்களாக,