பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131


கொடுத்த தலைப்புகள் பற்றிக் கட்டுரை எழுதுதல் கல்வி கல்வி என்ற சொல் கல் +வி என்று பிரிக்கப்படும். கல்வி என்ற பகுதி வி என்ற தொழிற் பெயர் விகுதி யைப் பெற்று வந்தது. கல்லுதல் என்ருல் தோண்டுதல் என்பது பொரு ளாம். மணற்கேணியானது தோண்டியதற்குத் தகுந்த நீர் அளிப்பதுபோல் கல்வியானது படித்தற்குத் தகுந்த அறிவளிக்கும். கல்வி என்ற சொல்லில் மூன்று எழுத்துக்களே இருக்கின்றன. அவை .ெ சா ல் வ ன வ ற் ைற க் கவனிப்போம். கல்வி என்ற சொல்லில் உள்ள 'கல்' என்ற சொல்லானது நீ படிப்பாயாக’ என்று அறிவுறுத்து கிறது. படித்ததனுலாய பயன் இன்னது என்று அது அறிவுறுத்துகின்றது. அதுவே கவி' என்பதாம். படித்தவனின் கடமையையும் அது உணர்த்துகின்றது. வில்க (விற்க) என்றும் அதுவே சொல்லுகின்றது. ஆகவே ஒவ்வொருவனும் படித்துக் கவிஞகிைத்தான் அறிவிக்க வேண்டும் என்றே அச்சொல் கூறுகிறது. மூன்று எழுத்துக்களில் எவ்வளவு பொருள் பொதிந் திருக்கின்றது பார். நம் முன்னேர்களின் அ றி ேவ அறிவு. கல்வியை இரு பாலாரும் படிக்க வேண்டியதே. இன விருத்திக்கு ஆணும் பெண்ணும் காரணமாவர்.