பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132


அறிவுடை மக்கள் தோன்ற அவர்கள் இருவருமே காரணமாவர். கல்விச் செல்வந்தான் நிலையான செல்வம். இது தீயால் தீமையுருதது; வெள்ளத்தால் அடித்துச் செல் லப்படாதது; கள்வரால் கவரப்படாதது; அரசரால் அபகரிக்கப்படாதது; காத்தற்கு எளிதானது. அரசனுக்கு அவனது நாட்டில்தான் பெருமை யுண்டு. கற்றவர்க்கு அவ்வாறன்று; அவர் செல்லும் இடங்களிலெல்லாம் சிறப்புப் பெறுவர். அப்பேர்ப் பட்ட கல்வியை யாவருங் கற்று இன்புறுவார்களாக. கொடுக்கப்பட்ட மேற்கொள் நூலிலிருந்து கட்டுரைப் பொருள் திரட்டுதல் திருக்குறள் வள்ளுவரின் இல்லறம் வள்ளுவரின் துறவறம் வள்ளுவர் கூறும் மக்கட் பண்பு வள்ளுவர் கூறும் அரசியல் வள்ளுவர் கூறும் அமைச்சியல் நல் நட்பு கூடா நட்பு வள்ளுவரின் வாய்ச் சொல் வள்ளுவர் எடுத்தாளும் உவமைகள் வள்ளுவர் ஓர் ஆழ்ந்த புலவர் காலம், மதங் கடந்தவர் வள்ளுவரே

:

உலகப் புலவர் வள்ளுவரே