பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134


தன் வரலாற்றுக் கட்டுரை (ஒரு பொருள் தானே தன் வரலாற்றைக் கூறுவது போன்ற கட்டுரைகள் எழுதல்) மழைத்துளி நான் ஒரு மழைத்துளி. எனது இருப்பிடம் கடல். எப்பொழுதும் நான் த னி த் து வாழ்வதில்லை. கோடிக்கான எனது சகோதரர்களுடன் கூடியே வாழ் வேன். எங்களை ஒருவராலும் பிரிக்க முடியாது. பிரித்தாலும் நானும் எனது சகோதரர்களும் பிறந்த இடத்திற்கே விரைவில் வந்தடைவோம். ஒருநாள் சூரியன் தனது கொடிய ஒளியை வீசினன். எனது சகோதரர்களிற் பலர் உருமாறினர். வெண்மை நிற ம் அடைந்தனர். ஆகாயத்திலே சென்றனர். அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கும் அந்நிலையே ஏற்பட்டது. எனது உருவமும் மாறியது. வெண்ணிறத்துடன் கடலில் இருந்து வெளியேறினேன். ஆகாய வெளியிலே அலைந்து திரியும் எனது க ண க் க ற் ற சகோதரர்களுடன் கூடினேன். நாங்கள் பல ஊர்களின் மேலும், பல காடுகளி னுாடும் சென்ருேம், மலையால் தடுக்கப்பட்டோம். குளிர் காற்று எங்கள்மேல் வீசியது, உடனே நாங்கள் எங்களது வெண்மைநிற உருவை இழந்தோம். காள மேகம்' எனப் பெயர் பெற்ருேம். குளிர் மே லு ம் மேலும் எங்களைத் தாக்க நாங்கள் எங்களது பழைய உருவத்தையடைந்து தரையில் வந்தோம்.