பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V. யாப்பு தளை, அடி, தொடை தளை நின்ற சீரின் ஈற்றசையோடு வருஞ்சீரின் முதலசை ஒன்றியாயினும், ஒன்ருமலாயினும் கூடி நிற்பதே தளையாம். நேர்முன் நேரும், நிரைமுன் நிரையும் வருவதே ஒன்றுதலாம். நேர்முன் நிரையும் நிரைமுன் நேரும் வருவதே ஒன்ருமையாம். அத்தளை (1) நேரொன்ருசிரியத்தளை (2) நிரை யொன்ருசிரியத்தளை (3) வெண்சீர் வெண்டளை (4) இயற்சீர் வெண்டளை (5) ஒன்றிய வஞ்சித்தளை (6) ஒன்ருவஞ்சித்தளை (7) கலித்தளை என ஏழு வகைப் படும். மாமுன் நேர்வருவது - நேரொன்ருசிரியத்தளை. 2. விளமுன் நி ைர வருவது - நிரையொன்ரு சிரியத்தளை. காய்முன் நேர் வருவது- வெண்சீர் வெண்டளை. 4. மாமுன் நிரையும், விளமுன் நேரும் வருவது இயற்சீர் வெண்டளை. 5. கனிமுன் நிரைவருவது- ஒன்றிய வஞ்சித்தளே. 6. கணிமுன் நேர்வருவது - ஒன்ரு வஞ்சித்தளை. 7. காய்முன் நிரைவருவது- கலித்தளே. இவ்வாறு தளை ஏழு வகைப்படும்.