பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 18. ஆண்டாற் பலரையும், பெண்பாற் பலரை யும், ஆண் பெண் என்னும் இரு பாலாரும் சேர்ந்த பலரையும் குறிப்பவை பலர்பாலாம். (உ-ம்) ஆடவர் - ஆண்பாற் பலர் தோழிமார் - பெண்பாற் பலர் மக்கள் - ஆண் பெண் பலர் குறிப்பு : ஆண் பால், பெண் பால், பலர் பால் ஆகிய இம் மூன்று பால்களும் உயர்திணையைச் சேர்ந்தவை. 19. அறிணையில் ஒரு பொருளைக் குறிப்பது ஒன்றன் பாலாம். (உ-ம்) அது, இது. 20. அ.:றினேயில் பலவற்றைக் குறிப்பது பல வின் பாலாம். (உ-ம்) அவை, இவை. குறிப்பு: ஒன்றன் பால், பலவின் பால் ஆகிய இவ் விரண்டும் அஃறிணையைச் சார்ந்தவை. கேள்விகள் 1. பாலாவது என்ன ? அதன் வகை எத்தனை? அவை எவை ? அவற்றுள் ஒவ்வொன்றையும் விளக்கி உதாரணம் தருக. 2. பலர் பாலாவது யாது? 3. பலர் பாலுக்கும் பலவின் பாலுக்கும் உரிய வேற் றுமை யாது ? 4 உயர்திணை அஃறிணைக்குர்ப.பால்கள் எவை?