பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

"மகனே! எதுவும் பழக்கத்தால் வருவது. வாழ்க்கையில் மிகவும் கவனம் தேவை. அவசியமான செலவு எது, அவசியம் இல்லாத செலவு எது என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்; ஆடம்பரமான உடைகள், சினிமா - நாடகம், சிற்றுண்டி விடுதிக்குச் செல்லுதல் ஆகியவற்றை நான் தவிர்த்து வந்துள்ளேன்.

வீட்டில் வெளிச்சத்துக்கு ஒரு விளக்கே போதும் என்றால், எதற்காக மற்றொரு விளக்கை எரிய விடவேண்டும்” என்று சொல்லிவிட்டு எழுந்தார்.

உடனே மகன் எழுந்து, தேவையின்றி, எரிந்து கொண்டிருந்த மற்றொரு விளக்கை அணைத்தான்.


24
எது கிடைத்தாலும் மகிழ்ச்சியே!

ஒரு சிறிய நாட்டை சிற்றரசன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான்.

தத்தன் என்ற காவலாளி, அரண்மனையில் வாயில் காப்போனாகப் பணிபுரிந்து வந்தான். அவன் அரசனிடம் மிகுந் விசுவாசம் கொண்டிருந்தான்.

அரசனைக் கொல்ல வந்த சில ஒற்றர்களை அவன் மிகவும் துணிவுடன் விரட்டி, அடித்திருக்கிறான், சிலரைக் குத்திக் கொன்று, அரசனைக் காப்பாற்றி யிருக்கிறான்.

அவனுடைய ராஜவிசுவாசத்தை அறிந்த அரசன், அவனுடைய ஏழ்மை நிலையைப் போக்கக் கருதினான்.