பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

செட்டியின் தந்திரத்தை அறிந்த உறவினனும் கூடச் சேர்ந்து அழுதான்.

அழுகுரல் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், உறவினர்கள், ஊர்மக்கள் அனைவரும் வந்து கூடிவிட்டனர்.

பிறகு, இறுதிச் சடங்குகளை விரைந்து செய்து, பாடையில் செட்டியை வைத்து, சுடுகாட்டுக்குக் கொண்டு போய் சிதையில் வைத்து தீயும் மூட்டினார்கள்.

அப்போதும் கூட, செட்டி மூச்சு விடாமல் பிணம் போலவே கிடந்தான்.

அதைக் கண்டு நடுநடுங்கிப் போன செட்டியின் மனைவி. அழுதபடியே, சிதை அருகில் போய் “ஐயோ! இப்பொழுதாவது எழுந்திருங்கள். தீ பரவி வருகிறதே!” என்று அலறினாள்.

ஆனாலும், செட்டி எழுந்திருக்காமல், “எனக்குப் பண்டம் தான் முக்கியம், உயிர் பெரிது அல்ல” என்று கூறி சிதையில் படுத்தவாறே, எரிந்து சாம்பலாகி விட்டான் செட்டி.

இத்தகைய கஞ்சன், கருமிகளும் இருப்பார்கள் போலும்!


33
ஊராரை ஏமாற்றி பறிகொடுத்தான்

ஒரு சிறிய நகரத்துக்கு பிராமணன் ஒருவன் வந்தான்.

அந்த நகரத்தில் இருந்த பெரிய வணிகனை தெரிந்து கொண்டு, அவனிடம் சென்றான் பிராமணன்.

“வணிகப் பிரபுவே! நான் சாஸ்திரங்கள் கற்ற புரோகிதன். புனிதப் பயணம் மேற்கொண்டு, ஊர் ஊராகச் சென்று, பச்சை