பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஞ்சு

20

அட்டனைக் கால்


 வீரனின் நல்ல பண்பு. Fearlessness is the virtue of a soldier.

அஞ்சு - அச்சங்கொள், fear, அஞ்சுவது அஞ்சாமை பேதைதமை, Not to fear what ought to be feared is a folly. (T. 428)

அஞ்சுகம் - கிளி, parrot. அஞ்சுகம் செல்லமாக வளர்க்கப்படும் பறவை. Parrot is a pet bird.

அஞ்ஞாத வாசம் - பிறர் அறியாத வண்ணம் மறைந்து வாழ்தல், living in exile, பாண்டவர்கள் ஆறு மாதங்கள் அஞ்ஞாதவாசம் இருந்தனர். The Pandavas lived in exile for six months,

அஞ்ஞானம் - ஆன்ம அறிவின்மை, spiritual ignorance, மக்களில் பெரும்பாலோர் அஞ்ஞானம் உள்ளவர்களே. Most people have spiritual ignorance, ஒ. மெய்ஞானம், மெய்யறிவு.

அஞ்ஞாளி - ஆன்ம அறிவு இல்லாதவன், spiritually ignorant person. அவன் ஓர் அஞ்ஞானி. He is a spiritually ignorant man.

அட்சக் கோடு - நீள் கோடு, latitude, நிலநடுக்கோட்டிற்குத் தெற்கே அல்லது வடக்காக ஓரிடத்தி லிருந்து பாகையில் அளக்கப் படுவது. This is the distance of a place north or south of the equator measured in degrees. ஒ. தீர்க்கக் கோடு.

அட்சதை - மஞ்சள் கலந்த மங்கல அரிசி, auspicious rice mixed with yellow turmeric paste. மணமக்கள் மீது பெரியோர்கள் அட்சதை தூவினர். The elders sprinkled auspi cious rice on the wedded couple.

அட்சயப் பாத்திரம் - எடுக்க எடுக்க அமுது வற்றாத கலம். The perennial food bowl giving food in pienty இன்று நம் நாட்டின் வறுமையை ஒழிக்க ஓர் அட்சயப் பாத்திரம் தேவை. Today we need a perennial food bowl to abolish poverty. பிச்சைக் கலம், begging bowl.

அட்சரம் - எழுத்து, letter.

அட்சர அப்பியாசம் - பாலபாடங்கற்றல், alphabet learning. குழந்தை அட்சர அப்பியாசம் பழகிக் கொண்டிருக்கிறது. The child is learning alphabets.

அட்டக்கரி - கறுப்பு, முழுக் கருமை நிறம், utter black, மாப்பிள்ளை அட்டக்கரி. The bride is utter black.

அட்டகாசம் - 1. அடாத செயல், atrocity. அட்டகாசம் என்பது வன்முறையின் ஒரு வடிவம். Atrocity is a form of violence. 2. கூச்சல், uproar. கூட்டத்தில் ஒரே அட்டகாசம். There was a great uproar in the meeting. 3. நேர்த்தி, excellence. அவளுக்குப் பல நேர்த்திகள் உண்டு, She has many excellences to her credit.

அட்ட சித்தி - அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிரா காமியம், ஈசத்துவம், வசித்துவம் முதலான எட்டு மகா யோக சக்திகள். இவை சித்தர்களுக் குண்டு. Eight-fold mystical powers possessed by the Siddhas,

அட்டனைக் கால் - கால் மேல் கால் போட்டு உட்கார்தல், sitting cross legged. நான் அட்ட னைக்கால் போட்டுத் தரையில் உட்கார்ந் திருந்தேன். I was sitting cross legged on the floor.