பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருப்பெருந்துறையில் திருச்சதகம் 113


திளைத்து ஆனந்தபரவசராக அமர்ந்துள்ளார்கள். பொய்யனாகிய யான் மட்டிலும் புறமே போந்து தனித்து வருந்துகின்றேன் என அருள் பெறாதாரைப் போன்று அமுங்கிக் கூறுவனவாகிய திருப்பாடல்களையுடைய இத்திருப்பதிகம் அடிகள் ஆனந்தபரவசராய்த் தம் வசமிழந்த நிலையினை இனிது புலப்படுத்துவதாகும்.

இன்னொருபாடல் :

  தாரா யுடையா யடியேற்
     குன்றா ளியணையன்பு 
  பேரா வுலகம் புக்காரடியர் 
     புறமே போந்தேன்யான் 
  ஊரா மிலைக்கக் குருட்டா மிலைத்தாங்(கு)
     உன்தன் இணையன்புக் 
  காராய் அடியேன் அயலே
     மயல்கொண் டழுகேனே  (7) 

(மிலைக்க - கனைக்க; ஆரா - பொருந்தாத)

என்பது ஏழாவது பாடல்; இதில் "யாண்டும் என்னை உடையவனே, எனக்கு உன்னை முறையாக நாடிய அன்பர்கள் மீண்டும் பிறவி விளையாத முத்தியடையப் பெற்றனர். ஆனால் நானோ விடு பேற்றினுக்கு வேற்றானாக இருக்கின்றேன். கன்றைப் பார்த்தோ திண்டியைப்பார்த்தோ ஊர்ப் பசுவானது பொருள்படக்கத்துகிறது. அதைக் கேட்ட குருட்டுப்பசுவும் பொருளற்ற கூச்சல்போடுகின்றது. அங்கனம் உன் அன்பு வேண்டுமென்று நான் வீணில் ஒலமிடுகின்றேன். செந்நெறிபற்றிய அநுபவம் எனக்கில்லை." என்கின்றார்.

இந்தப் பாசுரத்திற்கு அநுபவ ஞானம் காணும் சித்பவா னந்த அடிகள், "விவேகம் என்ற கண்ணில்லாதவன் குருட்டுப் பசுவுக்கு ஒப்பாகின்றான். சாதனத்தில் அவன் எடுத்துக் கொள்கிற முயற்சி பயனற்றதாகிறது' என்று விளக்கிக் காட்டுவர். மா-8