பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருப்பெருந்துறையில் திருச்சதகம் 115



இந்த இரண்டு ஞானச் செல்வர்கள் கூறுவது ஒருவகை நைச்சியாதுசந்தானம் (தாழ்வை வாய்விட்டுக் கூறுதல்).


(10) ஆனந்தாதீதம்

ஆனந்தாதீதம் என்பது பேரின்பத்தின் உயர்ந்த எல்லை. ஆனந்தம் - மெய்யுணர்வினால் நுகரத்தகும் பேரின்பம். அதீதம் கடந்த நிலை. தன்வசம் இழந்த ஆன்மா சிவானந்தாதுபவத்தில் கடந்த நிலையை சிவவிளக்கம் முற்றுப்பெற்றிருத்தல் என்று விளக்கலாம். ஆருயிர் சார்ந்ததன் வண்ணமாம் தன்மையுடையது. ஒரு பொருள் தன்னால் சாரப்பட்ட பொருளின் தன்மையையே தன் தன்மையாகக் கொண்டு நிற்பதுவே இது. தூய வெள்ளாடை தான் சார்ந்த வண்ணத்தைப் பெற்று உள்ளும் புறம்பும் அதன் தன்மையாய் அதன் உள்ளடங்கி அதன் நிறமும் பெயரும் பெற்று விளங்குவது இதற்கு ஒப்பாகும். இத்தன்மையே உயிர்களின் உண்மை எனப்படும் சொரூப இலக்கணம் ஆகும். உயிர் பாசத்தைச் சார்ந்தவழிப் பாசமாயும், பதியைச் சார்ந்தவழிப் பதியேயாயும் நிற்கும் என்பது சித்தாந்த உண்மை. உயிர்கட்கு இன்பத்தை விரும்புதலே இயற்கையாதலின் இன்பப் பொருளாகிய பதியை 10 அடைதலே உயிரின் இயல்பாக அமைந்துள்ளது. இதனால் ஆருயிர் சிவனையே மறவாநினைவுடன் நாடிக் கொண்டிருப்பின் சிவவண்ணத்தைப் பெற்றுச் சிவமாய்த் திகழும் என்பதை அறிகின்றோம். இந்நிலையில் பாச நீக்கமும் திருவருள் விளக்கமும் உண்டாகும். இஃது இருள் நீக்கத்தின்கண் ஒளி விளக்கம் உண்டாவதை ஒக்கும். இதன் மேல் ஆண்டவனின் தண்ணாத் தண்ணளியால் அழிவிலின்ப விளக்கம் உண்டாகும். இவ்வின்ப விளக்க மெய்யுணர்வோடு


10. அகமகிழவருந்தேன் முக்கனி, கற்கண்டு, அமிர்தம், என்றெல்லாம் தாயுமான அடிகள் பதியைக் குறிப்பிடுவது (தா, பா. பொருள்.வணக்கம் - 4) ஈண்டு நினைக்கத் தகும்.