பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆலவாய் நிகழ்ச்சிகள் 125



பாடல்களைப் படித்து அநுபவிக்க வேண்டும். குதிரைகளின் வகைகளைக் காட்டிய பாடல்கள் 7 , குதிரைகள் வந்த நாடுகளைக் கூறுபவை 8 , அசுவ இலக்கணம் கூறுபவை 9 போன்ற பாடல்கள் படித்து, சிந்தித்து நுகர வேண்டியவை குதிரைகளைக் கயிறு மாறிக் கொடுப்பதைக் காட்டும்,

  கொத்தவிழ்தார் நறுஞ்சாந்தம் கொண்டுசெல்லும்
     புகைதீபம் கொடுத்துப் பூசை 
  பத்திமையாற் செய்திறைஞ்சி யெதிர்நிற்ப
     ஆலவாய்ப் பரனை கோக்கிக் 
  கைத்தலந்தான் சிரமுகிழ்த்து வாழியெனப்
     பரிகொடுத்தான் கயிறு மாறி 
  முத்தொழிலின் மூவராய் மூவர்க்கும்
     தெரியாத முக்கண் மூர்த்தி

(தார் - மாலை; ஆவலாய்ப் பரன் - சோமசுந்தரக்கடவுள்)

என்ற பாடல் படிப்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்வது. இது நிற்க. கிடைத்தற்கரிய பரிகளைப் பெற்ற மகிழ்ச்சியினாலும் குதிரை ஏற்றங்களைக் கண்ட வியப்பினாலும் உள்ளங் கிளர்ந்தெழுந்த பாண்டியன், விலை மதிப்பில்லாத பொற்பட்டாடையொன்றைப் பரிப்பாகனாக வந்த இறைவனுக்கு வழங்க அதனை அவர், தம் பரிக்கோலால் வாங்கித் தன் அடியாராகிய வாதஆரர் பொருட்டுத் தம் முடிமிசைப் புனைந்து கொள்ளுகின்றார். இப்படி வாங்கினது,


7. க்ஷ - 97 - 103

8. க்ஷ - 104 - 107

9. க்ஷ - 109 - 120

10. க்ஷ - 121