பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலவாய் அருளிக் செயல்கள் 143 என்ற இறுதிப் பாடலாலும் உறுதிப்படுகின்றது. நீ குருந்த மரத்தடியில் என்னை ஆட்கொண்டதை நினைந்து என்னுடை எம்பிரான் என்று அழைத்தால், நீவா என்று சொல்ல மாட்டாயா?" என்கின்றார். ஈண்டு அலைகடல்’ என்றது துன்ப அலைகலையுடைய பிறவிப் பெருங்கடல். மதுரையில் தாம் அல்லல்படும் துன்பக்கடல் என்றலும் பொருந்தும். துன்பக்கடலுள் அல்லல்படுவோர் என்னை விரைவில் உன்னுடன் கூட்டிக்கொள்' என்று அழுதரற்றுவது இயல்புதானே கயிலை புகும்நெறி இதுவென்று அருளிச் செய்க" என்ற வேண்டுகோளும் இதற்கு அரணாக அமையும். இப்பதிகத்திற்கு மகா மாயாசுத்தி என்பது பழைய குறிப்பு. இறைவனது திருவருளை வேண்டித் தம்முடைய கருவி சரணங்களுக்கு இடமாய மாமாயையைத் துய்மை செய்து கொள்ளும் முறையில் அடிகளால் அருளிச் செய்யப் பெற்றது இப்பதிகம். ஆதலால் இதற்கு 'மகா மாயாசுத்திமாயையைச் சுத்தி பண்ணுதல்’ என்று முன்னோர் கருத்துரைத்தனர். 'இப்பிறப்பை விட்டு உன்திருவடி சேர்தற்கு அன்பு கொண்டு அழைத்தால் அது என்ன என்று கேட்டு ஆதரித்துக்கொள்' என வேண்டிக் கொள்வது அருட்பத்து என்பதாகக் குறிப்பிடுகின்றது திருப்பெருந் துறைப் புராணம், பாடல் தோறும், "...அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே’ என்ற முடிவு காணப்படுகின்றது. அதெந்து அதென்ன (மலையாள வழக்கு: அஞ்சாதே என்பது கன்னட வழக்கு. மதுரையில் தண்டத் தலைவர்கள் அரசன் ஆணையிட்ட வண்ணம் புளியம்வளாரால் அடித்துத் துன்புறுத்துகையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/161&oldid=864061" இலிருந்து மீள்விக்கப்பட்டது