பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற இடங்களில் அருளிச் செயல்கள் 163



என்பதில் ‘அடியேனது பிழையும் அடிமையும் பெருமானுக் கென்றே விரிப்பேன்; ஆதலால் என்னை விடுதலாகாது" என்கிறார். இப்பாடல்கள் இரண்டும் பழிப்பதுபோலப் பரவு தலாகும். முத்தாய்ப்பாக,

  ஏசினும் யானுன்னை ஏத்தினும்
     என்பிழைக் கேகுழைந்து 
  வேசறு வேனை விடுதிகண்
     டாய்செம் பவளவெற்பின் 
  தேசுடை யாயென்னை யாளுடை
     யாய்சிற் றுயிர்க்கிரங்கிக் 
  காய்சின வாலமுண் டாயமு
     துண்ணக் கடையவனே (50) 

(வேசறுவேன் - வருந்துவேன்; தேசு - ஒளி, காய்சின ஆலம்-கோபத்தையுடைய நஞ்சு:கடையவன்.இறுதி யாக இருப்பவன்).

என்கின்றார். ‘வாழ்த்தினாலும் வைதாலும் என் தவறுகளுக்கு யானே வருந்துவன்; விட்டு விடாதே’ என்கின்றார்.

நீத்தல் விண்ணப்பம் என்ற தொடருக்கு உலகப் பற்றை நீத்தல் பொருட்டு இறைவனிடத்து வேண்டிய வேண்டுகோள் எனவும், "என்னை நீத்து விடாதே’ என இறைவனை நோக்கிச் செய்து கொண்ட வேண்டுகோள் எனவும் இரு வகையாக நம் முன்னோர் பொருள் கொண்டுள்ளனர்.

  மித்தை யுலகினை யகற்றி
     விடாமல் எனைஆண் உருளென் 
  றத்தர் அறிந்திட நீத்தல்விண் 
     ணப்பம் அறைந்த துவாம் 

என வரும் திருவாசக உண்மையாலும் இது புலனாகும். இத் தொடர் "மித்தை உலகினை அகற்றி எனை ஆண்டருள்"