பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

I70 மாணிக்கவாசகர்



என்பது மூன்றாம் பாடல். வாதவூரடிகள் உற்றார், ஊரார், கற்றார், புகழ், கல்வி முதலிய உலகியல் தொடர்புகளை அறவே நீக்கி இறைவன் திருவடிக்கே நெக்கு நெக்குக் கசிந்துருகும் நேயம் மலிந்த நெஞ்சினராக விளங்கிய திறத்தினை இனிதுவிளக்கும் அநுபவமொழியாக இப்பாடல் இகழ்தலை அறிந்து இன்புறலாம்.

இப்பாடலில் குற்றாலம் என்ற தலம் குறிப்பிடப் பெறுவதைக் கொண்டு சைவர்கள் இத்தலத்தை வைப்புத் தலம' என்று கொள்வர். வைணவர்கள் இதை மங்களா சாசனம் பெற்ற தலமாகவே கொண்டு போற்றுவர்.

திருவாரூர் தேர் அழகு, திருவிடைமருதூர் தெரு அழகு என்பது மக்களிடையே நிலவிவரும் ஒருவசனம், தமிழ் நாட்டுக் கோயில்களில் திருவிழாச் சிறப்பில் திருவாரூர் தேர் அழகிற்குப் பேர் போனது தேர்நிலையை விட்டுத் தேர் புறப்பட்டால் மறுபடியும் அந்த இடத்திற்கு வந்து சேர மாதக் கணக்காகும் என்பர். திருவிடைமருதூர் இருக்கோயிலின் வெளிச்சுற்றைச் சுற்றிவருதல் அசுவமேதப் பிரதட்சிணம் என்பர். இது மிகவும் புனிதமான செயலாகச் ருதப்பெறுகின்றது.

திருவாரூருக்கு வந்த மணிவாசகப் பெருமான் மனுநீதிச் சோழனின் கதையைக் கேள்விப்பட்டிருப்பர். இந்த வரலாற்றை நினைவுறுத்தும் வகையில் கோயிலின் வட கிழக்குப் புறத்தில் ஒரு கல் தேரும், அதன் சக்கரத்தின் அடியில் ஒரு சிறுவனின் சிலையும் காணப்பெறுகின்றன. இவற்றின் அருகில் ஒரு பசுவும் இறந்து கிடக்கும் கன்றும் சிலை வடிவில் காணப்பெறுகின்றன. இவற்றையெல்லாம் அடிகள் கண்டிருக்கலாம். திருவாரூரில் பிறப்பதும், தில்லை யில் தரிசிப்பதும், காசியில் இறப்பதும் மோட்சம் என்பது ஒருவித ஐதிகம்; இதனை மக்கள் நம்புகின்றனர்.