பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருத்தில்லை நிகழ்ச்சிகள் 213



கையில் பிரம்பு தாங்கித் தில்லை நகர மக்களது கனவில் தோன்றி நீவிர் வருந்துதல் ஒழிமின்; நம்முடைய ஊர் எல்லையில் வாதவூரன் வந்து தங்கியுள்ளான். அவன் இம்மொழியைக் கேட்டபோதே விரைந்து வந்து அளவை நாலுக்குப் பொருத்தமான முறையில் புத்தர்களை வாதில் வெல்வான். தவப்பயனுடைய நீவிர் அவனை அண்மி அழைப்பீராக’ எனப் பணித்து மறைந்தருளுகின்றார்.

புத்தர்களை வெல்லல் : மறுநாள் காலை இவர்கள் திருக்கோயில் மண்டபத்தில் கூடித் தாம் கண்ட கனவினை ஒருவரோடொருவர் சொல்லி மகிழ்ந்து திருவாதவூரடிகளை அடைகின்றனர். இறைவனது அருள்வாக்கினை எடுத்துரைத்து வணங்குகின்றனர்.இறைவனது அருளிப்பாட்டினை அறிந்த மணிவாசகப் பெருமான் தில்லை மூவாயிரவருடன் சிற்றம்பலம் சென்று கூத்தப்பெருமானை வணங்கி வழிபட்டு அருள் பெற்றுப் புத்தர்கள் தங்கியிருக்கும் ஆயிரக்கால் மண்டபத்தை அடைகின்றார். சிவபெருமானுக்கு அன்பிலா தாரைக் கண்ணாற் காணுதலும் ஆகாது என்று நடுவே திரையிடுவித்து அத்திரை மறைவில் ஒர் இருக்கையில் அமர்கின்றார். சோழ மன்னன் விரைந்து அங்கு வந்து மணிவாசகரின் திருவடிகளை வணங்கி இறைஞ்சி அவர் அருகில் அமர்கின்றான். அப்பொழுது ஈழத்தரசனும் எழுந்து சென்று தான் கொணர்ந்துள்ள திறைப்பொருளைத் தந்து சோழ மன்னனை வணங்குகின்றான். சோழ அரசனும் மகிழ்ந்து அவனைத் தன் அருகே அமர்த்திக் கொள்ளுகின்றான். ஆராய்ந்துணர்ந்து வெற்றி தோல்வியினை நடு நின்று எடுத் துரைக்கும் சான்றோர்களும் அவை நடுவே வந்து அமர் கின்றனர்.

இனி, வாதம் தொடங்க வேண்டியதுதான். எல்லோரும் வந்து நிரம்பிய அச்சபையில் சோழமன்னன் திருவாதவூரரை