பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222 மாணிக்கவாசகர்



அதே விதத்தில் சுத்த சைதன்ய மாயிருப்பது (உணர் வுடையதாயிருப்பது) சிவம். அந்தச் சிவனிடத்திருந்து சட சக்தி வந்துள்ளது. சடசக்தி பஞ்ச பூதங்களாயின. பஞ்ச பூதங்களிலிருந்து எண்ணிறந்த அண்டங்கள் உண்டாயின. இவை யாவும் சிவபெருமானுக்கு உடலாக அமைந்துள்ளன. ஆதலால் அவற்றைத் திருஅண்டம் என அழைப்பது முறை. அண்டம் என்னும் சொல் உருண்டை அல்லது முட்டை வடிவில் இருப்பது எனப் பொருள்படுவது. எல்லாம் வல்ல பரம்பொருள் பிரபஞ்சப் (அகிலப்) பெரும் பரப்பாகிய அண்டங்களெல்லாம் இல் நுழைக்கதிராகிய வெயிலொளியில் விளங்கித் தோன்றும் நுண்ணிய அணுக்களைப் போன்று மிகச் சிறியனவாகத் தோன்றத் தான் அவற்றினும் மிகப் பெரியவனாகத் (பிரம்மம்-மிகப் பெரியது என்பதை நோக்குக: 'பிரம்மம் என்பதைப் பெரிய பொருள்' என்பர் தாயுமான அடிகள். தோன்றி எல்லா அண்டங்களுக்கும் அப்பாற் பட்டு விளக்குதலாகிய பருமைநிலையினையும், உயிர்க்குயிராய உள் நின்று எல்லாவகைப் பொருள்களையும் ஊடுருவி இயக்கியருளும் நுண்மைநிலையினையும் ஒருங்குடையவன்.இவ்வுண்மையினை இறையருளால் உணரப் பெற்ற மணிவாசகப் பெருமான் அம்முதல்வனது தூலசூக்கும நிலைகளை வியந்து போற்றுவதாக அமைந்தது திருவண்டப் பகுதி என்ற இப்பனுவல்; அகவல் யாப்பில் அமைந்துள்ளது. இஃது அண்டப் பகுதி உண்டைப் பிறக்கம் எனத் தொடங்கி அண்டப் பரப்பின் உள்ளும் பிறம்பும் திகழும் இறைவனது பேராற்றலை விரித்துக் கூறுவதால் திருவண்டப்பகுதி' எனத் திருப்பெயர் பெறுகின்றது. 'அண்டப் பகுதி' என்னும் இது ஆத்திசூடி" என்றாற் போல பாட்டின் முதற்குறிப்பால் பெற்ற பெயராகின்றது 'இணைக் குறளாசிரிப்பா' வடிவில் அமைந்த இது 182 அடிகளையுடையது.