பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236 மாணிக்கவாசகர்


அது இறை, உயிர், தளை (பதி பசு பாசம்) . இஃது அனாதி யாகிய சற்காரியவாதம் என்று முன்னோர் உரைத்த குறிப்பினால் புலனாகும். சற்காரியவாதம் - உள்ளாக்க வழக்கு. இதனை உள்வழக்கு எனவும் கூறுப. உள் வழக்கு என்பது இல்லது தோன்றாது, உள்ளது பொன்றாது’ என்ப தாகும். இது தில்லையில் அருளிச் செய்யப்பெற்றது என்பது கோயில் மூத்த திருப்பதிகம் சிதம்பரத்தில் அருளடையும் குறிப்பதாகும் எனவரும் திருப்பெருந்துறைப் புராணத் தொடர்பாலும் அறியலாம். இப்பதிகப் பாடல்கள் பத்தும் அந்தாதித் தொடையாக அமைந்துள்ளன.


இப்பதிகம் தில்லையைப்பற்றிய பழமையான பொருள்கள் பலவற்றையும் அறிவிப்பதாக அமைந்துள்ளது. பழமைக் கெல்லாம் பழமையான இறைவன் வசப்பட்டு அருட்சக்தி இருக்குந் தன்மையும், பொதுவிலக்கணத்தில் அருட்சக்தியின் வசப்பட்டு இறைவன் நிற்குந் தன்மையும், அடியார் வசப்பட்டு இருவரும் இருக்கும் தன்மையும் ஆகிய அநாதியாகிய சற்காரியத்தை உரைப்பதால் இது 'மூத்த திருப்பதிகம்’ என வழங்கப் பெற்றது. இவ்வாறே பதினோராந் திருமுறையில் காரைக்கால் அம்மையார் அருளிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகமும் சர்வ சங்கார காலத்தில் இறைவன் இருக்கும் நிலையை அறிவிக்கின்றது. இப்திகத்தின்,

  உடையான் உன்றன் நடுவிருக்கும் 
     உடையாள் நடுவுள் நீயிருத்தி 
  அடியேன் நடுவுள் இருவீரும்
     இருப்பதானால் அடியேன் உன் 
  அடியார் நடுவுள் இருக்குமரு
     ளைப்புரி யாய்பொன் னம்பலத்தெம் 
  முடியா முதலே யென்கருத்து
     முடியும் வண்ணம் முன்னின்றே (1)