பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருத்தில்லை அருளிச் செயல்கள் 237


(உடையாள் - உமையம்மை; நடுவிருத்தல் உள்ளீடாய் இருத்தல் முடியா முதல் - ஈறு இல்லாத முதல்வன்)

என்பது முதற் பாடல். இதில் "பொன்னம்பலத்தில் திருக்கூத்தியற்றியருளும் பொன்றாத முதல்வனே, பொருள்களை உடைமையாகவும், உயிர்களை அடிமையாகவும் உடையாளாம் திருவருளன்னை உனக்கு உயிராக இருப்பாள்: அவ்வுடையாளுக்கு உயிராக நீ இருப்பாய், நீங்கள் இருவீரும் அடியேனுக்கு உயிராக உள்ளீர்கள். அம்மெய்ம்மையால் உன் மெய்யடியார்களால் அடியேன் உயிர் போன்று பேணப் பட்டு அவர்கள் எனக்கு உயிராக அடியேன் அவர்கள் நடுவுள்ளிருக்கும் பேரருளினைப் புரிந்தருளுதல் வேண்டும்” என்கின்றார்.

இத்திருப்பாடல் திருவாசகநூலுக்கு இதய மந்திரமாகப் பாராட்டப் பெறுவது. நடுவிருத்தல் : உள்ளிடாயிருத்தல், உயிர்க்குயிராயிருத்தல், மெய்ப்புணர்ப்பாயிருத்தல் என்பனவாகும். இதனை அந்தர்யாமித்துவம் என்றும் கூறுவர். உள்ளிடு, உயிர்க்குயிர், மெய்ப்புணர்ப்பு என்னும் மூன்றும் முறையே அறிவு, ஆற்றல், அன்பு என்னும் மூன்றன் புடை. பெயர்வுகளைக் குறிப்பனவாகும். அத்தன் மெய்யினின்றும் அன்னை மெய் தோன்றினமையால் நடுவென்றலும் ஒன்று. அத்தன் மெய் - சிவ தத்துவம்; அன்னை மெய் - சத்தி தத்துவம். மெய்ப்புணர்ப்பு - சுத்தாத்துவிதம். சிவசிவ' என்னும் இப்பொருண் மறைக்கண் 'வ'கரமாகிய உடையாள் இருபக்கமும், சி கரமாகிய உடையான் நிற்க நடுவுள் இருக்கின்றமை புலனாகும். அதுபோல் சி கரமாகிய உடையானும் இருபக்கமும் 'வ கரமாகிய உடையாள் நிற்க நடுவுள் இருக்கின்றமையும் புலனாகும். இவைபோன்று 'சிவயசிவ' என்னும் பொருள் மறைக்கண் இருபக்கமும் சிவ' என்னும் உடையானும் உடையாளுமாகிய இருவரும் நிற்ப,