பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238 மாணிக்கவாசகர்



'ய' கரமாகிய ஆருயிர் நிற்கின்றமை புலனாகும். 'சிவயசிவ' என்னும் திருவைந்தெழுத்து மீ நுண்மையாகும்; மீதுண்மை அதி சூக்குமம். சிவசிவ முன்மையாகும்; முன்மை காரணம். 'சிவயநம என்ற ஐந்தெழுத்தின் புற அடையாளம் ஐவகை மன்றங்கள். இவை மணி, பொன், வெள்ளி, செப்பு(தாமிரம்) ஒவியம். இவை முறையே திருவாலங்காடு, திருத்தில்லை, திருக்கூடல் (மதுரை), திருநெல்வேலி, திருக்குற்றாலம் என்பர். இவை ஐந்திணையும் குறிக்கும் பொருண் மறை 'சிவயசிவ’ என்பதாகும். அடியார்கள் உண்மையில் சிவ வண்ணமேயாகின்றார்கள். மெய்யடியார்கள் அகத்துத் திருவைந்தெழுத்தினை ஆராக்காதலுடன், உணர்விற் கணிப்பதால் உடையான் உடையாள் நடுவுள்ளாகின்றனர். புறத்துச் சிவனார் திருவடையாளமாகிய திருவெண்ணிறும் சிவையின் திருவடையாளமாகிய சிவமணியும் பூணுதலால் அவ்விருவர்களின் நடுவுள்ளிருக்கின்றனர். திருநீறும் சிவமணி யும் உடலிடங் கொள்ளுவதே "எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய் (கோயில் திருப்பதிகம்-10) என்பதன் மெய்ப் பொருளுமாகும். திருப்பெருந்துறையில் சிவகுரவனாக எழுந்தருளின போது அன்புடை அடியார்கட்குக் காட்சி தந்து வெளிப் பட்டருளியும் தமக்கு ஓரளவு வெளிப்பட்டு முழுவதும் வெளிப்படாது மறைந்தும் நின்ற இறைவனது நிலையினை எண்ணி ஏக்கற்ற உளத்தினராகிய அடிகள்,

  கரைசேர் அடியார் களிசிறப்புக்
    காட்சி கொடுத்துஉள் அடியேன்பால் 
  பிரைசேர் பாலின் நெய்போலப்
     பேசா திருந்தால் ஏசாரோ (5) 

எனப் பொன்னம்பலத்தாடும் அமுதினைப் போற்றுவார். பிரை சேர்ந்த பாலினகத்து (தயிரில்) நெய் முழுதும் வெளிப்