பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246 மாணிக்கவாசகர் மூன்று திருப்பாடல்களில் நாம் ஆழங்கால் படுவோம்,

  ஓடும் கவந்தியுமே
     உறவென்றிட் டுள்கசிந்து 
  தேடும் பொருளும்
     சிவன்கழலே எனத்தெளிந்து 
  கூடும் உயிரும்
     குமண்டையிடக் குனித்தடியேன் 
  ஆடும் குலாத்தில்லை
     யாண்டானைக் கொண்டன்றே (1)

(ஒடு - திருவோடு; கவந்தி - கோவணம்; உள் - மனம்; குமண்டை - ஒருவகைக் கூத்து: குலா - விளங்குகின்ற)

என்பது முதல் பாட்டு. இதில், "உண்கலமாகிய திருவோடும், நீங்கா உடையாகிய கோவணமும் உடம்பினை மிகை எனக் கொள்வாரும் நீக்கார்; திருவடி மெய்யுணர்வினர் அவ்விரண்டினையும் அகப்புறம், புறம் என்னும் இருவகை உறவாகக் கொள்வர்; அம்முறையில் அடியேனும் அவ்விரண்டினையும் பற்றும் உறவெனக் கொண்டு உள்ளம் உருகி என்றும் விடாது தேடும் பெரும்பொருள், நின்திருவடியே என நின் திருவருளால் தெளிந்துள்ளேன்: தெளிந்து உடலும் உயிரும் உவகை மேலிட்டால் கூத்தாடுவனவாயின; இவை யனைத்தும் தில்லைச் சிற்றம்பலத்தின்கண் ஆடல் புரிந்து அருளும் ஐந்தொழில் இன்பக் கூத்தின் அசைவினாலாவன" என்கின்றார்.

  மதிக்கும் திறலுடைய
     வள்ளரக்கன் தோள்நெரிய
  மிதிக்குங் திருவடி
     என்தலைமேல் வீற்றிருப்புக்