பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248 மாணிக்கவாசகர்



  கடக்கும் திறல் ஐவர்
     கண்டகர்தம் வல்லாட்டை 
  அடக்கும் குலாத்தில்லை
     ஆண்டானைக் கொண்டன்றே (8)

(இடக்கு - தோண்டுகின்ற; முருட்டு ஏனம் - வலிய பன்றி; கண்டகர். கொடியவர்கள்; வல்லாட்டு . வலிய விளையாட்டு)

என்பது எட்டாம் திருப்பாடல். இதில் "தவம் புரிந்த அருச்சுனனைத் தாக்க அரக்கன் ஒருவன் பன்றி வடி வெடுத்துப் போனான். அப்பன்றியைத் தொடர்ந்து சிவனார் வேடன் உரு எடுத்துப் போனார். அப்படிக் காட்டில் நடந்த திருவடி என் தலையில் படிந்தபொழுது ஐம்பொறிகளின் குறும்பு அடங்கியது" என்கின்றார்.

கதை : ஐவருள் நடுவோனும் கண்ணனுக்கு மைத்துனனு மான அருச்சுனன் பகையை வெல்லும் பொருட்டுக் கானகத்தில் சிவனை நோக்கிக் கடுந்தவம் புரிகின்றாள். அவனுடைய தாயப் பகையாகிய அரவக் கொடியோன் ஓர் அசுரன் துணையால் அத்தவத்தினை அழிக்க முற்படு கின்றான்; அவன் ஒரு பன்றி வடிவெடுத்து அருச்சுனனை நோக்கிச் செல்லுகின்றான்; அதனை அடக்குதற் பொருட்டுச் சிவபெருமானும் ஒரு வேடனாய் அப்பன்றியினைப் பின் தொடர்கின்றான். பன்றியினைக் கண்டதும் அருச்சுனன் வில்வளைத்து நாணேற்றி ஒல்லும் வகை எய்கின்றான்; சிவபெருமானும் பின்புறமாக நின்று அம்பு தொடுக்கின்றான்; அப்பன்றி மாய்கின்றது. அருச்சுனன் உண்மையறியாது வேடனாக வந்த சிவபெருமானுடன் போர் தொடுக்கின்றான். பின்னர் உண்மை தெளிந்து சிவ பெருமானை வணங்கிப் படை (பாசுபதாஸ்திரம்) பெற்றுப் பகையை வெல்லுகின்றான்.