பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருத்தில்லை அருளிச் செயல்கள்-2 249



இவ்வுண்மை நிகழ்ச்சியினால் ஓர் உள்ளுறை மெய்ப் பொருள் தெளிவாகின்றது. பன்றி ஆணவ மலமாகும்: அருச்சுனன் எய்த அம்பு 'சிற்றுணர்வாகும்'. சிவபெருமான் எய்த அம்பு 'முற்றுணர்வு’ 4 ஆகும். ஆணவம் சிற்றுணர்வி னால் அடங்காது; முற்றுணர்வினால் மட்டும் அடங்கும் ஆனால் அம்முற்றுணர்வு சிற்றுணர்வைக் கருவியாகக் கொண்டு அதனை அடக்கும். அக்குறிப்பே பின்னின் றெய்தமையாகும். அருச்சுனன் பன்றி என்று உணர்ந்தனனே யன்றி அசுரன் என்று உணரவில்லை. அதனைச் சிவபெருமானே உணர்ந்தருளினன். இந்நிலையில் அருச்சுனன் எல்லார்க்கும் மேலாம் அளவிலாச் சீருடைய சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்தமையால் சிவன் அவனைக் காக்க முன்வர வேண்டுவது இன்றியமையாச் சிறப்புக் கடனாயிற்று. அங்ஙனமே வந்து காத்தருளினன். தவத்தோரைக் காப்பது சிவத்தின் தலைக்கடன் என்பதை அனைவரும் உணர்ந்துய்யக் காட்டப்பெற்ற நிகழ்ச்சியாகும் இது.


49. திருப்படையெழுச்சி (46) :

அடிகள் இருளாகிய ஆணவ மலத்துடன் சார்ந்து மயக்கத்தைச் செய்யும் மருளாகிய மாயா காரியங்களை ஆணவச் சார்பினின்றும் அகற்றி அருட் சார்பிற்குத் துணையாகும் வண்ணம் பொருதற் பொருட்டு "திருப்படையெழுச்சி பாடுகின்றார். இப்பனுவலுக்கு 'பிரபஞ்சப் போர்' என்று பண்டையோர் குறிப்புரை வரைந்தனர். மலவிளைவு அற்றது என்பது இதன் உட்பொருள், இருள் நிறைந்த இந்த உலகவாழ்வில் மருளாகிய மாயப்படை ஆன்மாவைப் பற்றி அலைக்காதபடி அருள் மறவரது படை


4. முற்றுணர்வு : பதியினது உணர்வு பொருள்களை ஒல்வொன்றாக உணராமல் எல்லாவற்றையும் ஒருங்கே உணர்வது; மேலும் அவற்றை இடை விடாது உணர்ந்தவாறே உணர்ந்து நிற்பது. அதனால் அது பேருணர்வு அல்லது முற்றுணர்வு’ என வழங்கப்பெறும்,