பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருத்தில்லை அருளிச் செயல்கள்-2 265


 விளக்கம் : காற்று அடிக்கும்போது ஒரு மரத்தின் கிளைகளும் அசைகின்றன ஆனால் அடிமரம் அசைவதில்லை. சகுண பிரம்மமாகிய நடராசர் ஆனந்தத் தாண்டவம் ஆடுகின்றார். நிர்க்குண பிரம்மமாகிய சிகாகாசம் அந்த ஆனந்தத்தையும் தன்னுள் ஒடுக்கிக் கொண்டு தன்மயமா யிருக்கின்றது. அதனுள் ஒடுங்குகின்ற பக்தர்களும் ஆனந்தா தீதத்திற்குப் போகின்றனர்

             'பாடல் -3
  பாவனை ஆய கருத்தினில
     வந்த பராவமுது ஆகாதே (அடி-1) 

பொருள் : பண்பட்ட மனத்தில் உதிக்கின்ற தெய்விக விருத்திக்குப் பாவனை என்று பெயர். அதன் வாயிலாக வருகின்ற தெய்விகக் காட்சிக்கு பாவனை சமாதி என்று பெயர்.

விளக்கம் : பராஅமுதை யோக சாத்திரம் அமிர்த தாரை என வழங்கும். குண்டலினி சக்தி மூலாதாரத்தினின்று விழித்தெழுந்து மேல் நோக்கிப் போவது யோகியின் அநுபவம் ஆகின்றது. அது மற்ற ஆதாரங்களைத் தாண்டி சகஸ்ராரம் என்னும் ஏழாவது ஆதாரத்தின்கண் உச்சந் தலையில் எட்டுகின்றது. அப்போது சக்தி சிவத்தோடு சேரு கின்றது. அதன் விளைவாக உச்சந்தலையினின்று அமிர்த தாரை சொட்டுகின்றது. அது பரமானந்தத்தை ஊட்டு கின்றது. இதுதான் பாவனை சமாதி. நிர்விகல்க் சமாதியில் இந்தப் பாவனை சமாதியும் அடிபட்டுப் போகின்றது.

  அந்தம் இலாத அகண்டமும்
     நம்முள் அகப்படும் ஆகாதே (அடி-2) 

பொருள் : எல்லை இல்லாத உலகங்கள் அனைத்தும் நம் உள்ளத்தில் தோன்றுகின்றன.