உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருத்தில்லை அருளிச் செயல்கள்-2 267



(என்.அணி ஆர் முலை - எனது நெஞ்சு: ஆகம் - (இறை வனுடைய) திருமேனி; அளைந்து - படிந்து)


பொருள் : மூர்த்தியாகப் பரமனை தரிசித்து அவனைக் கட்டித் தழுவி ஆலிங்கனம் செய்வது சாத்தியப்படாது.

விளக்கம் : மார்க்கண்டேயன் சிவபூசை செய்து கொண்டிருந்தபொழுது மறலி வந்து பாசக் கயிற்றை வீசினான். இளைஞன் சிவனைச் சரணடைந்து சிவலிங்கத்தைத் தழுவியபோது இலிங்கம் மூர்த்தியாக மாறியது. பக்தனுடைய நெஞ்சைத் தழுவியபோது உண்டான சிவானந்தத்தை யார்தான் சொல்லால் விளக்க முடியும்? அதைவிட்டுப் பிரிய எந்த பக்தன்தான் இணங்குவான்? பெறுதற்கரிய அந்தப் பேறும் நிர்விகல்ய சமாதியில் அடிபட்டுப் போகின்றது.

  மன்னிய அன்பரில் என்பணி
     முந்துற வைகுவது ஆகாதே (அடி-3) 
 (மன்னிய - நிலைபெற்ற முந்துற வைகுவது - முற்பட்டிருத்தல்) 

பொருள் : அன்பர் பணிவிடை செய்தல் என்னும் ஆனந்தக் கைங்கரியம் அதீதத்தில் நிகழ்வதில்லை.

விளக்கம் : அப்போது தான் வெட்டியெடுத்த பச்சை மரத்திலும் தீப்பற்றி எரியும்படி செய்ய விரும்பினால் அதற்கு ஒர் உபாயம் உண்டு. கனல்விட்டு எரிகின்ற காட்டுத் தீயில் அப்பச்சை மரத்தைப் போட்டு விட்டால் சிறிது நேரத்தில் அதுவும் தீப்பற்றிக் கொள்ளும். சான்றோர்க்குப் பணிவிடை செய்யும் வாய்ப்பு ஒருவனுக்கு நேருமாகில் அந்தச் சான்றோரது சால்பு பணிவிடை புரிபவருக்கும் சொந்தமாகி விடுகின்றது.

வாதவூரடிகள் ஆனந்தக் கைங்கரியத்திற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு ஆகின்றார். குதிரை வாங்குவதற்காக