பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272 மாணிக்கவாசகர்



உள்ள இணக்கங்கள் யாவும் அவர்களுக்கிடையில் நிகழ்வனவாயின. நிர்விகல்ப சமாதியில் வாதவூரர் வணங்குதற்குப் பொன்னார்மேனியன் இல்லை. இராமகிருஷ்ணருக்கு அருள் வடிவான அன்னை பராசக்தி இல்லை. இறுதி நிலையில் இருவர் அநுபவமும் ஒன்றேயாயிற்று.

  தன்னடி யாரடி யென்தலை
     மீது தலைப்பன ஆகாதே. (அடி-3) 

(தழைப்பன ஆகாது - அருளை வளர்க்க மாட்டா)

பொருள் : சிவஞானம் பெற்றவரே சிவகுரு ஆகின்றார். அன்னவர் திருவடி சீடன்சிரசில் படிந்து ஸ்பர்சதீட்சையாகும் போது ஞானோதயம் உண்டாகின்றது. அது நிர்விகல்ப சமாதியாகுங்கால் குரு-சீடபேதம் போய் விடுகின்றது.

விளக்கம் : அருள் குருவுக்கும் பக்குவமான சீடனுக்கும் உள்ள இணக்கம் ஒப்பு உயர்வு அற்றது. எ-டு சிவகுருநாதன். மணிவாசகர். இதனோடு சீர்தூக்குதற்கு உலகில் வேறொன்றும் இல்லை. வேண்டுமானால் ஓர் உவமையைக் கொண்டு விளக்கலாம். வெந்தழல் போன்றவர் குருநாதன்; விறகு போன்றவன் சீடன். இருவரும் இனிது ஒன்றுபடுவது முடிவு. அப்படி ஒன்றுபடுவதில் துவைதம்: விசிட்டாத் வைதம், அத்வைதம் ஆகியவற்றிற்கு ஏற்பப் பாகுபாடுகள் அமைகின்றன. ஒரு சமயம் இராமபிரான் மாருதியை நோக்கி, நீ என்னை எவ்வாறு கருதுகின்றார்?’ என்று கேட்கின்றார். அதற்கு அந்த அஞ்சனைக் குமரன் தந்த விடை : என்னிடத்து உடல் உணர்வு இருக்கும்போது நீ ஆண்டான்; நான் உன்னை விட்டு அகலாத அடிமை. என்னிடத்து சீவான்ம போதம் வரும்போது நீ பூரணன்; நான் உன்னில் ஓர் அம்சம். என்னிடத்து சுத்த சைதன்ய போதம் வரும்போது நீயே நான்; நானே நீ, இஃது எனது. முடிந்த அநுபவம்” என்பது.