பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282 - மாணிக்கவாசகர்


மிருந்து வேலை வாங்கினார் (தோழமை நெறி). பாரமார்த்திகப் பெருநிலையில் இச்செயல் பொருளற்றது. வாதவூரரை ஆட்கொள்ளும் பொருட்டு அடியார்கள் புடைகுழ ஞானாசிரியனாக சிவன் எழுந்தருளியதும், பரிமேலழகனாக வந்ததும், பிட்டுக்கு மண் சுமந்ததும் நிர்விகல்ப சமாதியில் பொருளற்றவையாகப் போகின்றன. வெவ்வேறு பாங்குகளில் கயிலையைச் சென்றடைவதும், ஆங்குச் சிவசாந்தியத்தில் இன்புற்றிருப்பதும் நிர்விகல்ப சமாதியில் இடம் பெறமாட்டா. முடிந்த நிலையாகிய சுத்த சிவ சைதன்யத்தில் நாம ரூபங்களோடு கூடிய வியத்திகளுக்கு இடம் இல்லை.

நிர்விகல்ப சமாதிக்கும் கிரமமுக்திக்கும் வேற்றுமை யொன்று உண்டு. சுத்த கர்ப்பூரம் எறிந்தால்-சாம்பலோ கரியோ எஞ்சியிருப்பதில்லை.இது போன்று நிர்விகல்ப சமாதியில் சிவபோதம் எஞ்சியிருப்பதில்லை.அது பரபோதத்தில் ஒடுங்கிவிடுகின்றது. கயிலாயத்திற்கும் வைகுந்தத்திற்கும், சத்தியலோகத்திற்கும் சென்று பதவி முக்தி துய்க்கின்றனர். பக்தர்கட்கு அது மிகப் பிரியமானது. பூவுலகில் செய்த ஆன்ம சாதனங்கள் ஆங்கும் நிகழ்ந்து வருகின்றன. பிரளயம் வரும்போது அன்னவர் எல்லோரும் கிரம முக்தி அடைகின்றனர். அப்பொழுது அது நிர்விகல்ப சமாதிக்கு நிகர் ஆகின்றது.

  எங்கும் கிறைந்தமு துறு
     பரஞ்சுடர் எய்துவது ஆகாதே (அடி - 4)

பொருள் : நிர்விகல்ப சமாதி அடையப் பெற்றவன் அதிலிருந்து ஒரு படி கீழே இறங்கி வந்து சவிகல்ப சமாதியில் பரமானந்தத்தில் திளைத்திருப்பதில்லை. ஆனந்தாதீதத்துக்குப் போனவன் ஆனந்தத்துக்கு இறங்கி வருவதில்லை.

விளக்கம் : பரமன் ஒரே காலத்தில் சிதம்பர ரகசியமாகவும், நடராசராகவும், அம்மையப்பராகவும், அட்ட மூர்த்தி