பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருத்தில்லை அருளிச் செயல்கள்-2 283



யாகவும் இருக்கின்றான். இந்த நிலைகளை முறையே குண பிரம்மம், சகுணபிரம்மம், பிரகிருதி - புரு பிரகிருதி தத்துவம் என வேதாந்தம் கூறும். பிரகிருதி தத்துவத்தில் உருவெடுக்கின்றான்.சடமா இருந்து பிறகு சேதநமாகப் பரிணமிக்கின்றான். தேவி மலையரசனுக்குச் செல்வியாகப் பிறப்பதில் இ பாடு அடங்கியுள்ளது. ஆறுமுகம் என்று சொல்.-- ஆறுஞான பூமிகளில் இருப்பவர்கள் எல்லோரும் சீவ மாக்களேயாம். முதல் ஞான பூமி சடசக்தி அல்லது தாரம்.ஆறாவது ஞானபூமியாக இருப்பது நடராச தத்துவப அல்லது சகுண பிரம்மம். சகுண பிரம்மத்தை அடையும் பொழுதும் சீவான்மாவுக்கு சீவ வியக்தி இருக்கின்றது. அத்தகையவனுக்கு ஞானத்தில் மேல்நோக்கிப் போவது போன்று அஞ்ஞானத்தில் கீழ்நோக்கிப் போவதும் சாத்தியம், பிறவிப் பெருங்கடலில் உழல்பவனுக்கு மேலான பிறவியும் கீழான பிறவியும் வினைக்கு ஏற்றவாறு வந்து வாய்க்கின்றன.

சவிகல்ப சமாதியை எட்டுகின்றவன் விரைவில் நிர்வி கல்ப சமாதிக்குப் போதல் வேண்டும். சீவனுடைய முயற்சியும் ஈசனுடைய அருளும் அதற்கு ஒன்று சேர வேண்டும். நிர்விகல்ப சமாதியில் முத்தி அல்லது வீடு எய்துதல் பூர்த்தியாகின்றது. சிதம்பரம் போனவர் திரும்பி வருவதில்லை என்பதன் பொருள் இதுவாகும். அதீதத்தில் இருக்கும் இப்பெருநிலையை அடையப் பெற்றவன் பகர்வது:

  அந்த சாந்த மூர்த்தி, அசையாத 
  பிரம்மம் இரண்டற்ற பேரின்பம், 
  திரண்ட பேரறிவு-அப்பொருளே
  நான்

என்பதாகும்." 7


7. திருப்படையாட்சி' - என்ற பகுதியின்கண் உள்ள விளக்கங்கள் யாவும் பெருந்தவத்திரு சித்பவாநந்த அடிகளின் திருவாசகப் பதிப்பிலுள்ள விளக்கங் களைத் தழுவி எழுதப்பெற்றவை.