பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



14. திருவாசகம்-பதிக முறை வைப்பு

இதுகாறும் வெளிவந்த திருவாசகப் பதிப்புகளில் சிவபுராணம் முதல் அச்சோ பதிகம் ஈறாக ஐம்பத்தொரு பகுதிகளாக முறைப்படுத்தப்பெற்று வழங்கி வருகின்றது. இம்முறை வைப்பு திருவாதவூரடிகள் அருளிய கால அடை வினைப் பற்றியதோ, அன்றி அவர்தம் திருப்பாடல்களால் உணர்த்தப்பெறும் பொருளடைவினைப் பற்றியதோ என்பது திட்டமாகத் தெரிந்து உறுதி செய்யப்பெறவில்லை. ஆனால், திருவாசகம் மணிவாசகப் பெருமான் சொல்லத் தில்லைச் சிற்றம்பலப் பெருமான் எழுதிக் கொண்டது என்பது வரலாறு. அதன் வண்ணம் இப்போது வழங்குகின்ற முறை வைப்பு இருக்கலாம் என்பது தெளிவு, பாட்டுடைத் தலைவராகிய சிற்றம்பலவன் முன்னிலையில் பாடிய பாடல்களை முறைப்படுத்திப் பெரியோர் வைத்த முறையே முறை என்று கொண்டு அமைதி பெறுவதே நாம் மேற்கொள்ள வேண்டிய முறை.

பதிகப் பெயர்கள் : திருவண்டப் பகுதி, பண்டாய நான் மறை, குழைத்த பத்து என்பன அப்பாடல்களில் வரும் முதற் சொல்லையே கொண்டு வைத்த பெயர்கள் என்பது புலனாகும். திருவெம்பாவை, திருவம்மானை, திருக்கோத்தும்பி, திருச்சாழல், திருத்தெள்ளேணம், திருப்பூவல்லி, திருவுந்தி யார், திருத்தோணோக்கம், திருப்பொன்னுரசல், திருப்பள்ளி யெழுச்சி அடைக்கலப்பத்து, அன்னைப் பத்து, ஆசைப்