பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15. அருளிச் செயல்கள்

மணிவாசகப் பெருமான் அருளிய நூல்கள் இரண்டு. இவை, திருவாசகம் திருச்சிற்றம்பலக் கோவை என்பன: இவை சிவபெருமானது திருக்கரத்தால் எழுதிக் கொள்ளப் பெற்ற சிறப்புடையவை. இத்திருப்பாடல்களை "திருவாசகம்" எனவும், "திருச்சிற்றம்பலக் கோவை" எனவும் இரு வேறு தலைப்பில் வைத்து எண்ணப்படினும் இவ்விரு நூல்களும் 'பேச்சிறந்த மாசில் மணியின் மணிவார்த்தை'யாகவே விளங்குதலால் திருவாசகம் என்று ஒரு பெயராலும் வழங்கப் பெற்று வந்துள்ளன. கோவைத் திருவாசகம் எனத் திருக்கோவையாருக்கு வழங்கும் பழம்பெயராலும் இவ் வழக்கின் தொன்மை இனிது புலனாகும்.

திருவாசகம் என்பது, முத்தியாகிய பேரின்பத்தை அடைவதற்குரிய பத்தி நெறியின் இலக்கியமாகத் திகழும் தேன்பிலிற்றும் தெய்வப் பனுவல். உலக வாழ்விற்கு இன்றியமையாத அன்பினை விளைவிக்கும் அகனைந்திணை ஒழுகலாற்றை விரித்துரைக்கும் பாங்கில் பத்தி நெறியின் பயனாகிய பேரின்ப வாழ்வின் அநுபவ நிலையினை விளக்குவது திருச்சிற்றம்பலக் கோவை எனப்படும் திருக்கோவையார். எனவே, இந்த இரண்டு செந்தமிழ்த் தெய்வப் பனுவல்களும் பொருளால் ஒன்றே என்பது நன்கு தெளிவாகும். இந்த அருள் நூல்கள் இரண்டையும் எட்டாந்