பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருளிச் செயல்கள் 307



யாப்பு கையாளப் பெற்றுள்ளது.அன்றியும், நானூறு துறைகளாக வகுத்தமைத்துப் பாடியவர் மணிவாசகப் பெருமானேயாவர். அடிகள் நானூறு என்னும் பாடல் தொகையினைத் தேர்ந்து எடுத்துக் கோண்டமைக்கு நற்றினை நாஅடு, குறுந்தொகை நானூறு, நெடுந்தொகை நானுாறு என அமைந்த சங்கத் தொகை நூல்களே அடிப்படையாக அமைந்திருத்தல் வேண்டும்.

இக்கோவையில் இயற்கைப் புணர்ச்சி, பாங்கற், கூட்டம், இடந்தலைப்பாடு, மதியுடன் படுத்தல், இருவரும் உள்வழி அவன்வர உணர்தல், முன்னுற உணர்தல், குறையுற உணர்தல், நாண நாட்டம், நடுங்க நாட்டம், மடல் குறை நயப்பித்தல், சேட்படை, பகற்குறி, இரவுக்குறி, ஒருவழித் தணத்தல், உடன் போக்கு, வரைவு முடுக்கம், வரை பொருட் பிரிதல், மணஞ்சிறப்புரைத்தல், ஒதற்பிரிதல், காவற்பிரிதல், பகைதணி வினைப் பிரிதல், வேந்தற் குற்றுழிப் பிரிதல், பொருள்வயிற் பிரிதல், பரத்தையிற்பிரிதல் என இருபத்தைந்து கிளவிக் கொத்துகளாகப் பகுக்கப் பெற்ற இருபத்தைந்து அதிகாரங்களையுடையது. இவ்வமைப்பு இறையனார். களவியலுரையினை அடியொற்றி மேற்கொள்ளப்பட்டதாகக் கருத இடம் உண்டு. திருவள்ளுவர் காமத்துப்பாவில் 25 அதிகாரங்களை அமைத்த பாங்கு ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.

அகத்திணை யொழுகலாற்றினை உணர்தற்குக் கருவியாய உள்ளுறை, இறைச்சி என்பவற்றைப் போலன்றி. அவ்வொழுகலாற்றோடு தொடர்பில்லாததாய் இரட்டுற மொழிதலால் பிறிதொரு பொருள் விளங்கித் தோன்றும் பாடல்களும் இக்கோவையில் உள்ளன. அகப்பொருளுக்கு அயன்மையுடையதாய்த் தோன்றும் இப்பொருளை உரையாசிரியராகிய பேராசிரியர் நுண்ணிதின் உணர்ந்து இவற்றை