பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322 - மாணிக்கதாசகர்



என்ற திருவாசகத் தொடர்சளும் வாதவூரடிகள் காலத்து ஆட்சி புரிந்த பாண்டியனுடன் நெருங்கிய தொடர்புடை யவர் என்பது நன்கு புலனாகும்.


குரு உபதேசம் : மாணிக்கவாசகர் வரலாற்றில் பெரிய திருப்பத்தையுண்டாக்கியது குதிரை வாணிகம் பற்றிய நிகழ்ச்சி, பெரும்பொருளுடன் கீழ்க்கடல் துறையை நாடிச் செல்லும்பொழுது வழியிடையே திருப்பெருந்துறையில் சிவபெருமான அடியார்களாகிய மாணாக்கர்கள் புடைசூழ அந்தணராய் ஆசிரியத் திருமேனி கொண்டு. எழுந்தருளி யிருந்து அமைச்சராகிய வாதவூரரை அருள் நோக்கால் அழைத்தருளி தீக்கை புரிவித்து திருவைந்தெழுத்தின் உட்பொருளை உபதேசித் தருளுகின்றார். இச்செய்திக்கு அடிகளின் பல்வேறு பாடல்கள் அகச்சான்றுகளாக அமைகின்றன.

  தெங்குதிரள் சோலைத்
     தென்னன் பெருந்துறையான் 
  அங்கணன் அந்தணனாய்
     அறைகூவி வீடருளும் 
  அங்கருணை வார்கழலே
     பாடுதுங்காண் அம்மானாய் (175)
                                   --திருவம்-1 
  எந்தரமும் ஆட்கொண்டு
     தோட் கொண்ட நீற்றனாய்ச் 
  சிந்தனயை வந்துருக்கும்
     'சீரார் பெருந்துறையான்    (177)
                                   --திருவம்-3 
     தென்னன் பெருந்துறையான் 
  காட்டா தனவெல்லாம்  
     காட்டிச் சிவம்காட்டித் 
  தாட்டா மரைகாட்டித்
     தன்கருணைத் தேன்காட்டி