உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருளிச் செயல்களில் அடிகள் 335



என வரும் அடிகளது வாய்மொழியால் இனிது புலனாகும். இறைவன் தம் துயரத்தைத் தீர்க்கத் திருவுளங் கொண்டு மிழலைக் காடுகளில் திரியும் நரிகளைக் குதிரைகளாக்கிச் சிவகணத்தலைவர்களைக் குதிரை வீரர்களாக வரும்படி செய்து தானும் அழகியதோர் குதிரைமேல் பரிமேலழகனாக எழுந் தருளிய செய்தி அடியிற் காணும் அடிகளின் வாக்கில் பல முறை வந்திருத்தல் காணலாம்.

  குதிரையைக் கொண்டு குடநா டதன்மிசைச் 
  சதுர்படச் சாத்தாய்த் தானெழுந்தருளியும்  -கீர்த்திதிரு.27-28 
  அரியொடு பிரமற் களவறி யொண்ணான் 
  நரியைக் குதிரை யாக்கிய தன்மையும்     -௸ 35-36 
  அளியொடு பிரமற் களவறி யாதவன் 
  பரிமா வின்மிசைப் பயின்ற வண்ணமும்    -௸ 115-116 

என்ற கீர்த்தித் திருவகவல் அடிகளாலும்,

  ஒருங்குதிரை யுலவுசடை 
     யுடையானே நரிகளெல்லாம் 
  பெருங்குதிரை யாக்கியவா
     றன்றேயுன் பேரருளே (544) -திருவேசற- 1

என்ற திருவேசற்றப் பாடற் பகுதியாலும்,

  ஆட லமர்ந்த பரிமாவேறி
     ஐயன் பெருந்துறை யாதியந்நாள் 
  ஏடர் களையெங்கும் ஆண்டுகொண்ட
     இயல்பறி வாரெம் பிரானாவரே  (590) -திருவார்த்-4 
           (ஏடர்கள்-தோழர்கள்) 
  சங்கங் கவர்ந்துவண் சாத்தினோடும்
     சதுரன் பெருந்துறை யாளியன்று 
  மங்கையர் மல்கு மதுரைசேர்ந்த
     வகையறி வாரெம் பிராணாவாரே (596) -௸10 

(சங்கம்-வளை, சாத்து - வணிகர் கூட்டம்; மதுரை சேர்ந்த வகை: வளையல் விற்க மதுரைக்கு வந்த வரலாறு)

என்ற திருவார்த்தைப் பாடல்களாலும் தெளிவு பெறலாம்.