உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 மாணிக்கவாசகர் இறைவன் கொணர்ந்த மாயக் குதிரைகள் யாவும் அன்றிரவே நரியாக மாறி மதுரை நகரில் உள்ளோரைக் கடித்துப் பிச்சேற்றிய செய்தியை, கரியைக் குதிரைப் பரியாக்கி ஞால மெல்லாம் நிகழ்வித்துப் பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய் (647) -ஆனந்தமாலை-7 குதிரைப்பரி-குதிரையாகிய விரைந்த செலவினை யுடைய ஊர்தி, பிச்சதேற்றும்.திகைக்கச் செய்யும்) என்ற ஆனந்தமாலைப் பாடற்பகுதியால் அறியலாம். பரியை நரியாக்கிய செய்தியை அடிகள் வெளிப்படையாகக் குறிப் பிடாவிடினும், மதுரையெல்லாம் பிச்சதேற்றும் பெருந்துறை யாய் என்றதனால், பரிகளை நரிகளாக்கி மதுரையில் உள்ளவர்களைக் கடித்துப் பிச்சேற்றிய நிகழ்ச்சியைப் புலப் படுத்துகின்றார் என்பது ஆழ்ந்து நோக்குவார்க்குப் புலனா காமற் போகாது. அடிகளது சிவாதுபவம்: குதிரைகளுடன் மதுரையை நோக்கி வரும் இறைவன் வழியில் திருவாதவூரையடைந்து அடிகளின் செவியிற் புலனாகுமாறு தமது திருவடிச் சிலம் பொவியைக் காட்டியருளினார் எனவும், சிறையிலிருந்த வண்ணமே அடிகள் அவ்வொலியைச் செவிமடுத்து "இஃது என்னை யாண்ட எம்பெருமானது பாதச் சிலம்பொலியே' எனத் தெளிந்து இறைவனை வழுத்தி இறைஞ்சினார் எனவும் நம்பிதிருவிளையாடல் குறிப்பிடும்." இந்நிகழ்ச்சி, 6. இங்ங்ணம் இறைவன் சிலம்பொலியைக் கேட்டு மகிழ்பவர் மற்றொரு சிவனேசர் சேரமான் பெருமாள் நாயனார். இவ்வாசிரியர் எழுதியுள்ள 'தம்பிரான் தோழர் (பக். 126-127 காண்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/354&oldid=864469" இலிருந்து மீள்விக்கப்பட்டது