பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்களில் அடிகள் 341 மேலும், இத்தகைய நிகழ்ச்சிகளால் இறைவன் தென் பாண்டி நாட்டையே சிவ லோகமாகச் செய்தருளின சிறப்பினை, மாவார வேறி மதுரை நகர் புகுந்தருளித் தேவார்ந்த கோலம் திகழப் பெருந்துறையான் கோவாகி வந்தெம்மைக் குற்றேவல்கொண்டருளும் பூவார் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ 凌 -திருப்பூவல் (20) எனவும், பெற்றி பிறர்கரிய பெம்மான் பெருந்துறையான் கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார் குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச் சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான் தொல்புகழே (194) -திருவம். 20 எனவும் வரும் திருப்பாடல்களில் அடிகள் குறித்துப் போற்றுவர். அடியார்கள் தீப்பாய்தல்: இறைவனுடனிருந்த அடியார் கல் தீப்பாய்ந்ததிறத்தையும் தனது தனிமையையும் அடிகள், காயி னேனை நலமலி தில்லையுட் கோல மார்தரு பொதுவினில் வருகென ஏல என்னை பீங்கொழித் தருளி அன்றுடன் சென்ற அருள்பெறும் அடியவர் ஒன்ற ஒன்ற உடன்கலந் தருளியும் எய்தவக் திலாதார் எரியிற் பாயவும் தவக் திலாத "醬 (127-132). என்ற கீர்த்தித்திருவகவல் பகுதியாலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/359&oldid=864479" இலிருந்து மீள்விக்கப்பட்டது