பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 மாணிக்கவாசகர் றொழிதல் வேண்டும் என்றும், பேரின்ப உருவினதாகிய சிவத்தோடு இரண்டறக் கலந்து தாமும் சிவமுமாய் நிலை பெயராப் பேரின்ப நிலையில் இருத்தல் வேண்டும் என்றும் கருதுகின்றான். சிவமாதல் : எம்பெருமான் அருளால் உயிர்கள் மாயை கன்மங்களின் துணையால் அறியாமை தேய்ந்து அறிவு விளங்கப் பெறுகின்றன. பின்னர் அவை தமக்குத் தோன்றாத் துணையாக நின்று அருள் புரியும் சிவபரம்பொருளை அடைந்து அம்முதல்வன் அருளில் இரண்டறக் கலந்து ஒன்றாதலிலே தமது நாட்டத்தைச் செலுத்துகின்றன. மேலும், அவை உலகியற் பொருள்களிலும் தம்மைச் சூழ்ந் துள்ள உற்றார் உறவினர் முதலியோரிடத்திலும், தம் உடம்பிலும், உயிராகிய தம்மிலும் செல்லும் உணர்வை மடித்துத் திருப்பி தம் உயிர் உணர்விற்கு உணர்வாய் விளங்கும் சிவபரம்பொருளில் படியச் செய்கின்றன. இந் நிலையில் தாம் ஒரு பொருள் உண்டென்பதை மறந்து சிவமாகவே அமர்ந்து விடுகின்றன. இந்நிலையை மணி வாசகப் பெருமான் 'சிவமாதல்’ எனக் குறிப்பிடுகின்றார். சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன் (648 - அச்சோ - 1) என்ற அச்சோ பதிகப் பாடற் பகுதியாலும், சிங்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட அந்தமிலா ஆனந்தம் (473 - கண்ட-1) என்ற கண்டபத்துப் பாடற் பகுதியாலும் இதனை அறி யலாம். 'சிவமாதல் என்றது, ஆன்மா தற்போதமாய் நிற்பதும் செய்யாமல் தானென்கின்ற முதல் கெடுவதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/374&oldid=864501" இலிருந்து மீள்விக்கப்பட்டது