பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 மாணிக்கவாசகர் கடிப்பிரிவற்று இரண்டற நிற்கும். இங்ங்னம் ஆன்மா அந்தச் சிவத்தோடும் கூடிச் சிவமாய் நிற்கும் என்பதை, அவமாய தேவர் அவகதியில் அழுந்தாமே பவமாயங் காத்தென்னை யாண்டுகொண்ட பரஞ்சோதி நவமாய செஞ்சுடர் நல்குதலும் காமொழிந்து சிவமான வாயாடித் தெள்ளேணம் கொட்டாமோ (238) திருத்தெள் 4 |அவமாய பயனற்ற; அவகதி கீழ்நிலை; பவமாயம் - பிறவிக்கு ஏதுவாய வஞ்சனை: நவம்- புதுமை) என்ற திருத்தெள்ளேணத் திருப்பாடலால் அறியலாம். "தேவர் பிறப்பும் மாந்தர் பிறப்பும் வினையால் வருவன. மாந்தர் பிறப்பினும் தேவர் பிறப்பு பயனின்றிக் கழியும் வீண் பிறப்பாகும். வீணாய்க் கழியும் தேவர் பிறப்பும், வீண் செருக்கேற்றும் அவர்தம் நிலையும் இரங்கத் தக்கவை, இந்நிலையில் எளியேனை அழுந்த விடாமல் பிறப்பினைப் பின்னும் பெருக்கும் மருள்நெறி புகாமல் காத்து ஆண்டு கொண்டருளினன். அவன் அருட்பேரொளியாவன்; அவனே என்றும் புதுமையாக இயற்கையில் திகழும் அறிவு நிறை செஞ்சுடராவன்; அவன் அவ் அறிவுச்சுடரை எளியேன் மாட்டு நல்குதலும் அப்பொழுதே (ஒளி முன் இருள்போல், 'யான்'என்ற உடற்பற்றும்,'எனது என்னும் உடமைப்பற்றும் ஆகிய அகப் புறப்பற்றுகள் அகன்று அடங்கின்; அடங்கலும் சிவமாம் பெருவாழ்வு எய்தினம். எய்தலும், எங்கும் இலாததோர் இன்பம் நம்பாலதாயிற்று. அச்சிறப்பினைப் பாடித் தெள்ளேனம் கொட்டுவோமாக’ என்கின்றார். மேலும் இத்திருப்பாடலில் நாம் ஒழிந்து என்பது மலப்பிணிப்பாம் உயிர்த்தன்மை (பசுத்துவம்) அகன்று கலப்பிணிப்பாம் திருவருட்சார்பு எய்துதலாகும். காரணம், பசுவின் அறிவு அஃது அடையும் பொருளின் தன்மையாக மாறிவிடும், இதுவே சித்தாந்தம் பேசும் சார்ந்ததன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/376&oldid=864503" இலிருந்து மீள்விக்கப்பட்டது