பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 மாணிக்கவாசகர் இம்மூன்றற்கும் பொதுவாய் நிற்றலையே வேதம் அத்வி தீயம் (அத்துவிதம்) என்று கூறுகின்றது. இதன் உண்மைப் பொருள் சித்தாந்தத்துள்தான் விளங்குகின்றது. இறைவன் உயிர்களோடு கலப்பினால் ஒன்றாயும், பொருட்டன் மையால் வேறாயும், உயிர்க்கும் உயிராதல் தன்மையால் உடனாயும் நின்று உலகத்தைச் செயற்படுத்துவான்’ என்பது சித்தாந்தம் தரும் விளக்கம்". இங்ங்னம் ஒன்றெனலும் ஆகாமல் இரண்டெனலும் ஆகாமல் தூய நல்லுயிர்கள் சிவத்தோடு இரண்டறக் கலந்து சிவத்தன்மையாய் அடங்கி ஒன்றாகும் வீடு பேற்றின் நிலையை 'சிவமாதல்’ என்ற சொற்றொடரால் அறிவுறுத்தப் பெறும். சைவ சித்தாந்த முடிவுப் பொருளாகும். இம் முடிவினைத் தெளிவாக்கும் நிலையில் அமைந்ததே 'நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாம் ஒழிந்து சிவமான வாயாடி’ எனவரும் திருவாசகத் தொடராகும். இறைவன் அருளும் சிவஞானத்தால் உள்ளத் தெளிவும் பெறாதவர்களும் இங்ங்ணம் சிவமாதலாகிய பேரின்ப நிலையை அடைய முடியாது என்பதனை, தெளிவறியாதார் சிவமாக மாட்டார் (1480) என்று திருமூலரும் அறிவுறுத்துவார். இக்கருத்தை திருவாசகப் பாடலொன்றால் தெளிவாக அறியலாம். நிலநீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன் புலனாய ஐந்தனோ (டு) -எண்வகையாய்ப் புணர்ந்துகின்றான் 4. அத்துவிதம் : இதன் விரிவான பொருள் விளக் கத்தை இவ்வாசிரியரின் 'சைவ சமய விளக்கு” பக். 63 - 68, (பாரி நிலையம், சென்னை - 108), என்ற நூலில் காண்க -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/378&oldid=864505" இலிருந்து மீள்விக்கப்பட்டது