பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருந்துறை நிகழ்ச்சிகள் 37


 என வரும் பாடற்பகுதியை எடுத்துக் காட்டி அடிகள் குருவின் திருமேனியைக் காணுவதற்கு முன்னமும் திருப்பெருந் துறையிற் சிவபெருமானுக்குத் தனிக் கோயிலுண்டு என்ற குறிப்பை வற்புறுத்தல் காணலாம் என்று குறிப்பிடுவர்."

ஆரூர் மூலட்டானம் (6.70 : 2) எனத் தொடங்கும் அப்பர் பெருமானின் க்ஷேத்திரக் கோவைத் திருத்தாண்டகத்தில்

            பெருந்துறை காம்பீலி பிடவூர்'

என்று குறித்துப் போற்றப்பெற்ற பெருந்துறை என்னும் வைப்புத்தலம் திருப்பெருந்துறை எனக் கருதுதற்கும் இடம் உண்டு என்றும் கூறுவர்.

இக்காலத்தில் ஆளுடையார் கோயில் என வழங்கும் திருப்பெருந்துறையின் ஒரு பகுதியாகிய வடக்கூரில் வெள்ளாற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஆதி கைலாசநாதசுவாமி கோயில் பழைய திருப்பெருந்துறைக் கோயிலாக இருத்தல்வேண்டும் எனத் தம் ஊகத்தையும் காட்டுவர்.



23. பன்னிருதிருமுறை வரலாறு-இரண்டாம் பகுதி பக். 57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/55&oldid=1012335" இலிருந்து மீள்விக்கப்பட்டது