பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருந்துறை அருளிச் செயல்கள் 39


 இருக்கவேண்டும்’ என உணர்கின்றார். இங்கு அவர் திருவாயினின்றும் அற்புதப் பத்து பிறக்கின்றது.

அற்புதப் பத்து (41) 1

இது பத்துப் பாடல்களைக் கொண்டது. 'அநுபவமாற்றாமை-அநுபவம் முற்றுதல் பொறாமை விம்முதல்’ எனக் கருதுரைப்பர் முன்னையோர். குறுணி கொள்ளும் கோணியில் முக்குறுணி திணித்தால் அது விம்முதலைப் போலச் சிவாதநுபவம் எல்லையின்றிப் பெருக அஃது இங்ஙனம் இருந்ததென்று சொல்லவும் முடியாதபடி விம்முதல். அற்புதம் என்பது,இதுவரையிலும் தோன்றாததும் இனித்தோன்றவும் கூடாததுவுமான நிகழ்ச்சிகள் விளைகின்ற காலத்துத் தோன்றும் உணர்வு. சிவாநுபவம் ஆன்மாவுக்குப் புதிதாகையாலும் ஒருமுறை அடைந்த ஆன்மா மீட்டும் அதனை அடைய வேண்டிய வாய்ப்பு நிகழாமையாலும் இவ்வற்புதத்தை உற்ற ஆன்மா அதனைப் பொறுக்கமுடியாது விம்முதல் இயல்பு. அந்த நிலையை அறிவிக்கும் இஃது அற்புதப் பத்தாகின்றது. உலக இன்பமே உயர்வு என்று எண்ணி இருந்த அடிகளுக்கு உண்மையறிவை அளித்து ஆண்டது அதிசயம் என்று உரைத்தல் அற்புதப்பத்தாகும் என்று உரைக்கின்றது திருப்பெருந்துறைப் புராணம். இப்பத்தில்,

  மாடும் சுற்றமும் மற்றுள போகமும்
     மங்கையர் தம்மோடும்
  கூடி யங்குள குணங்களா லேறுண்டு
     குலரவியே திரிவேனை

1. பிறைக்குறிகளின் இடையே உள்ள எண் திருவாசகப் பதிப்பிலுள்ளு (தருமபுரப் பதிப்பு) எண்ணைக் குறிப்பது இந்த நூல் முழுதும்.இவ்வாறே கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/57&oldid=1012347" இலிருந்து மீள்விக்கப்பட்டது