பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருந்துறை அருளிச் செயல்கள் 41




  என்னையும் ஒருவனாக்கி இருங்கழல் 
  சென்னியில் வைத்த சேவக போற்றி  2 

எனவரும் அடிகளது வாய்மொழியால் புலனாகும். இறைவன் தன் பொன்னார் திருவடிகளைச் சூட்டி அருள்செய்தமையால் தம் சென்னிக்கு வாய்ந்த பெருஞ்சிறப்பினை எண்ணி உவந்து போற்றுகின்றார். பத்துத் திருப்பாடல்களில், இறைவன் சேவடி தம்முடையை சென்னியில் மன்னி விளைக்கும் பேரானந்தத்தை நினைந்து போற்றும் நிலையில் அருளிய பதிகம் ஆதலின் "சிவவிளைவு" என முன்னோர் கருத்து உரைத்துள்ளனர்.

  முத்த னைமுதல் சோதியை முக்கண்
     அப்ப னைமுதல் வித்தினைச் 
  சித்த னைச்சிவ லோக னைத்திரு
     நாமம் பாடித் திரிதரும் 
  பத்தர் காள்! இங்கே வம்மின் நீருங்கள்
     பாசந் தீரப் பணிமினோ 
  சித்த மார்தரும் சேவ டிக்கணஞ்
     சென்னி மன்னித் திகழுமே (10) 

(முத்தன்-நித்திய முத்தியில் இருப்பவன்; முதல்வித்துஅனைத்திற்கும் மூலமாய் இருப்பவன்; பாசம்- ஆணவ மலக்கட்டு)

என்பது இப்பதிகத்தின் பத்தாம் திருப்பாடல். ஒவ்வொரு பாடவிலும் "சேவடிக்கணஞ் சென்னி மன்னித் திகழுமே” என்று வருவது நோக்கத்தக்கது. இதில் தாள்-தலை = தாடலை என்ற அத்துவிதக் கலப்பு குறிப்பாகப் புலப்படுத்தி இருப்பதைக் கண்டு மகிழலாம். ஈண்டு தலை ஆன்மாவையும், தாள் இறைவனையும் குறிக்கின்றன. இதனை இருசொற்கள் எனக் கொள்ளவும் முடியாது. ஒரு


2. திருவா. போற்றித் திருவகவல், அடி 129, 130

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/59&oldid=1012351" இலிருந்து மீள்விக்கப்பட்டது