பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருந்துறை அருளிச் செயல்கள் 69



கூறுவதால் இக்கருத்து வலியுறுகின்றது. இதில் ஏழு பாடல்கள் அடங்கியுள்ளன.

  மின்னே ரனைய பூங்கழல்கள்
     அடைந்தார் கடந்தார் வியனுலகம் 
  பொன்னே ரனைய மலர்கொண்டு
     போற்றா நின்றார் அமரரெல்லாம் 
  கன்னே ரனைய மனக்கடையாய்க் 
     கழிபுண் டவலக் கடல்வீழ்ந்த 
  என்னே ரனையேன் இனியுன்னைக்
     கூடும் வண்ணம் இயல்பாயே (1) 
(ஏர் - அழகு; அனைய - ஒத்த; கடையாய் - கடைப்பட்டவனாய்; அவலக் கடல் - துன்பக் கடல்)

என்பது இப்பனுவலின் முதற் பாடல். மின்னேர் அனைய பூங்கழல்கள்" எனத் தொடங்குவதால் இதையே இப் பனுவலின் தலைப்பாகக் குறித்தலும் உண்டு. இதில் 'மின்னலையொத்தவைகளும் அழகிய தாமரை மலரை யொத்தவைகளுமாகிய நின் திருவடிகளையடைந்த அடியார்கள் பேருலகங்கள் அனைத்தையும் கடந்து எய்தற்கரிய பெரும்பேறு பெற்றனர். துறக்கவுலகத்து வாழும் தேவர்களெல்லாம் பொன் போன்ற மலர்களைக் கொண்டு வழிபடு கின்றனர். கல்லையொத்த சடபுத்தியையுடையவன் நான்; மிக மட்டமானவன் என்று அறிஞர்களால் தள்ளி வைக்கப் பட்டவன். துன்பக் கடலில் விழுந்து சிறுமையால் எனக்கு நானே ஒப்பானேன். இனி உன்னை அடையும் வகையைக் கூறியருள்க’ என்கின்றார். 'இப்பாடல்களில் இனி உன்னைக் கூடும் வண்ணம் இயம்பாயே (1) எனவும், பன்னாள் உன்னைப் பணிந் தேத்தும் பழை அடியாரொடுங் கூடாது, என் நாயகமே பிற்பட்டிங்கிருந்தேன் நோய்க்கு விருந்தாயே (2) எனவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/87&oldid=1013519" இலிருந்து மீள்விக்கப்பட்டது