பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70 மானிக்கவாசகர்



கோலங்காட்டி யாண்டானைக் கொடியேன் என்று கூடுவதே (3) எனவும் வரும் திருப்பாடல்களின் தொடர்கள் அடியார்கள் பலரும் இறைவனைத் தலைப்பட்டு இன்புற்றிருக்க, அந்த இன்பப் பேற்றில் திளைக்கும் நிலையை அவாவிய அடிகளின் விருப்பத்தினை நன்கு புலப்படுத்துகின்றன என்பதைத் தெளியலாம்.

  சில மின்றி கோன்பின்றி
     செறிவே யின்றி அறிவின்றித் 
  தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் 
     சுழன்று விழுந்து கிடப்பேனை 
  மாலுங் காட்டி வழிகாட்டி
     வாரா உலக நெறியேறக் 
  கோலங் காட்டி யாண்டானைக்
     கொடியேன் என்றே கூடுவதே (3)
 (சீலம் - சரியை, நோன்பு - கிரியை, செறிவு - யோகம்: அறிவு-ஞானம்; தோலின்பாவை-தோற்பொம்மை: கோலம் - குருவடி வான அழகு)

என்பது மூன்றாம் பாடல். அதில் 'என்னிடத்தில் நல்லொழுக்கம் இல்லை; விரதம் இல்லை; அடக்கம் சிறிதளவும் இல்லை. விவேகமும் இல்லை; நான் வீணில் அலைந்து திரிவது தோற்பாவைக் கூத்தாகும். நான் கொண்டுள்ள மயக்கத்தை நீக்குதற்கான வழியை நினைவூட்டி நன்னெறியைப் புகட்டியுள்ளாய். நின் திருக் கோலத்தைக் காட்டி முத்திநெறியையும் காட்டியுள்ளாய், தீ நெறியில் ஒழுகும் நான் உன்னை எப்பொழுது கூடுவேனோ தெரியவில்லை’ என்கின்றார். - சீலநெறி நில்லார் மாலின்மெய்ம்மை தேறார். நோன்பு நெறி நில்லார் நாடற்கரிய நன்னெறியின் பீடுணரார்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/88&oldid=1013522" இலிருந்து மீள்விக்கப்பட்டது