பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74 மாணிக்கவாசகர்



திருக்கோயிலில் இறைவனுடைய திருமஞ்சனத்துக்குரிய நறுமணப் பொடியினை இடிக்குந் திருப்பணியில் ஈடுபட்ட மகளிரின் உள்ளமோ வையத்து வாழ்வினை மறந்து இறைவன் திருவருளாகிய தெய்வமணத்தில் ஒன்றித் திளைக்கும் பெரு மகிழ்ச்சி அடைதல் இயல்பாகும். அன்றியும், மணப்பொடியை இடிக்குங்கால் தம் தலைவனின், புகழைப் பாடிக் கொண்டு இடிப்பதால் இசை தொழிலில் துயர் தோன்றாதவாறு தடுப்பதோடு பொருளால் இன்பத்தையும் விளைவிக்கும்." எனவே, திருப்பொற்சுண்ண மிடிக்கும் இளமகளிரது உரை யாடலாக அமைந்த இப்பனுவலுக்கு "ஆனந்தமனோலயம்' என்று முன்னோர் கருத்துரை கூறினர்; இதற்கு விளக்க உரை அளித்தோர் "தானன்றி நிற்றல்" என்றனர். சிவானந்தத்தால் தான் கெட்டு மனோலயமான பிறகு தோன்றுவது ஒன்றுமின்மையின் தானன்றி நிற்றல் என்பது சரியான உரையாக அமைகின்றது.

நாம் பெற்றுள்ள உடல், கருவி, உலகு, நுகர்பொருள் (தனு கரண புவன போகம்)ஆகிய இவை யாவும் தம்பாலுள்ள வாலாமை நீங்கித் தூயனவாய் இறைவனது திருமேனிப் பூச்சுக்கு ஏற்ற இனிய நறுமணப் பொடியாய் நுணுகும்படி அவற்றை மாற்றியமைத்தருளும் வண்ணம் அருட்சக்திகளை அழைப்பது இத்திருப்பொற் சுண்ணத்தின் உட்கிடை என்று கூறுவர் பெரியோர். இந்நுட்பம்,


3. உலக்கை கொண்டு இடிக்கும் நிலையில் பாடுவதாக அமைந்த இப்பனுவல் சிலம்பில் வரும் வள்ளைப் பாட்டினையும், அடியார்க்கு நல்லார் உரையில் குறிக்கப்பட்ட அவலிடி என்னும் வரிப்பாடலையும் ஒத்த அமைப்புடையதாக இருப்பது உய்த் துணரத்தக்கதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/92&oldid=1013661" இலிருந்து மீள்விக்கப்பட்டது