பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருந்துறை அருளிச் செயல்கள் 8i



சிவபோத இன்பம் மிகுந்து தென்னா தென்னா என்று தெள்ளேனம் கொட்டுவது என்று திருப்பெருந்துறைப் புராணம் கூறுகின்றது. இப்பனுவலின் இரண்டு பாடல்களை அநுபவித்து மகிழ்வோம்.

  திருவார் பெருந்துறை
     மேயபிரான் என்பிறவிக் 
  கருவேர் அறுத்தபின்
     யாவரையும் கண்டதில்லை 
  அருவாய் உருவமும்
     ஆயபிரான் அவன்மருவும் 
  திருவாரூர் பாடிநாம்
     தெள்ளேணம் கொட்டாமோ(2)

என்பது இப்பனுவலின் இரண்டாம் திருப்பாடல். பிறவியின் மூலமாகிய வினையும், அதற்கு அடியாயுள்ள மலமும் அற்ற பிறகு சிவபோகம் பெருகுகின்றது. இந்நிலை தானும் அவனும்கூட அற்ற நிலையாகும். இந்நிலையில் அழுந்தி நிற்றலின் யாவரையும் கண்டதில்லை என்கின்றார்.

  கனவேயும் தேவர்கள்
     காண்பரிய கனைகழலோன் 
  புனவே யனவளைத்
     தோளியொடும் புகுந்தருளி 
  நனவே எனப்பிடித்
     தாட்கொண்டவா நயந்துநெஞ்சம் 
  சினவேற்கண் நீர்மல்கத்
     தெள்ளேனம் கொட்டாமோ(10) 

மா-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/99&oldid=1014178" இலிருந்து மீள்விக்கப்பட்டது