பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களுள் எஞ்சிய ஒன்றையும் முன் வைத்தார். கணவனும் மகிழ்வுடன் உண்டலக் காண நுண் ணரிதின் மகிழ்ந்தது புனிதவதியார் முகனும். பரம தத்தன் மனைவியார் படைத்த மதுர மிக வாய்த்த மாங்கனியைச் சுவைத்தான். சுவையைத் துய்த்த தார் வணிகன், மேலும் சுவைக்க இனியதொரு பழம் உளது. அதனையும் இடுக, என இயம்பின்ை. பழம் சுவையாய் இருந்தது. அச்சுவையைத் தன் வாழ்க்கைத் துணைவியும் துய்க்க வேண்டுமென்று எண்ணினுன் அல்லன் கா8ள வணிகன். புள்ளின மும், விலங்கினமும் தம் துணையிடத் து வைத்த அன்புதானும் இவன்பால் இல்லை போலும் !

‘துடியடிக் கயங் தலை கலக்கிய சின்னிரைப்

பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறு'

'அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை

மென்சிறக ரால்ஆற்றும் புறவு”

‘இன்னிழல் இன்மையால் வருந்திய மடப்பிணக்குத்

தன்னிழலைக் க்ொடுத்தளிக்குங் கலை’

என்னும் இவ்வடிகளின் திரண்ட பொருள், ‘உடுக்கை போன்ற கால்களையுடைய யானைக் கன்று கலக்கிய சிறுநீரைத்தான் குடிக்க முயலாமல், முன் னர்த்தன் துணையாகிய பெண் யானே பருகும்படி செய்து பின் மிகுந்ததை ஆண் யானே குடித்தது,’ என்பதும் ; பாலைவனம் வழியே சென்றுகொண் டிருந்த ஆண் புரு, தனது பெண் புரு வெம்மையால் வருந்துவதைக் கண்டு தன் சிறகால் காற்றை எழுப்பி, அதன் வருத்தத்தைப் போக்கியது, என் பதும் ; ஆண் மான், பாலைவனம் வழியே சென்று