பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமையாச் சமயமாய் இருந்தது. என்ருலும், அம்மையார் உள்ளம் தடுமாற்றம் அடையவில்லை. "அறிவுடையார் எல்லாம் உடையார்’ அல்லரோ ? "இல்லது என் இல்லவள் மாண்பாகுல்? அவர் இல்லாளன் அனுப்பிய நல்ல மாங்கனிகள் இரண்ட னுள் ஒன்றை அடியவர்க்கு இனிதாகப் படைத்தார். விருந்தினர் உண்டு மகிழ்ந்த இன்முகங் கண்டு அம்மையாரும் ஈத்துவக்கும் இன்பத்தில் திளைத்தார். வந்த விருந்தினரும் அம்மையாரை வாழ்த்திச் சென் றனர்.

பரமதத்தன் உற்ற பெரும்பகலின் கண் ஓங்கிய பேரில் புகுந்தனன், பொற்புற நீராடினன் : அடிசில் அருந்தச் சென்றனன். இவையே. பரமதத்தன் செயல்களென்று ஆசிரியர் சேக்கிழார் கூறுகிருt. ஈண்டுப் பரமதத்தன் பண்பாட்டைப் படம் பிடித் துக் காட்டுகிருர் பாவலர், பகற்போது நீராடினுன் என்றதனுல் காலேயில் குளிக்கும் கடமை அற்றவன் பரமதத்தன் என்பது அறிய வருகிறது. நீராடிய பின்பேனும் பூசுவன பூசிப் போற்றுவன போற்றும் பொற்பு அற்றவன் என்பது நீராடிய பின் நேரே சமையல் அறையுட்புக்கமையிலிருந்து ஆணித்தர மாக விளங்குகிறது. ஆகவே, அன்ன்ை இயல் புக்கும் அம்மையார் பண்புக்கும் எத்துணை வேற் றுமை காணக் கிடக்கிறது என்பதை அறியலாம் அன்ருே? இங்ங்ணம் அறிந்தால், அவனைக் காளைக்கு உவமையாகக் கூறியது பொருத்தம்ன்ருே ?

பரமதத்தன் முன் பரிகலம் திருத்திப் புனிதவதி யாரும் உணவுபரிமாறிஞர். முன்னனுப்பிய மாங்கனி