பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. ஒற்றியூர் ஒள்ளிழையார்

சான்ருேம் உடைத்துத் தொண்டை நன் னுடு, ’ எனத் தக்கோர் புகழும் இத்தண் டமிழ் நாட்டில் திருவொற்றியூர் என்னும் திருப்பதி திகழ்கிறது. இது சென்னைக்கு வடபால் அமைந்த கடற்கரைப் பட்டினம்; ஒதம் வந்துலவும் ஒற்றியூர் என்னும் ஒண்புகழுடையது. இதனைப் பூலோகச் சிவலோகம் என்று புலவர் கூறுவர். இதற்கு அண்மையதாய் ' ஞாயிறு என்னும் ஒரு நற்பதியுண்டு.

இப்பதியின் கண் வேளாண் குடியினர் பலர் வாழ்ந்து வந்தனர். அவருள் ஞாயிறு கிழார் என்னும் நல்லார் ஒருவர் நலனுற வாழ்ந்து வந்தார். அன்னுர் ஆற்றிய அருந்தவப் பயனுல் அவர்க்கு ஒர் அருமை மகளார் பிறந்தனர். அம்மகளார் பெற்ருேர் போற்ற வளர்மதி போல வளர்ந்து வரு வாராளுர். இறையன் பும் அம்மகளார் பால் இளமை முதலே வளரலாயிற்று. அம்மகளார் சங்கிலி என்னும் நன் னுமஞ்சூட்டி வழங்கப்படலாயினும். சங்கிலி என்பது ஒரு புனே பெயராகவே இருத்தல் வேண்டும். அவ்வம்மையார் எதையும் ஐயம் திரிபற அறிந்து சங்கை (ஐயம்) இன்றி இருந்த காரணம் பற்றிச் சங்கையிலி என்பது மருவிச் சங் கிலியாயிற்ருே என்று நாம் யூகிக்க இடம் உண்டு. ஆதன் தந்தையார் என்பது எப்படி நாளடைவில் ஆந்தையார் எ ன் று ஆயிற்றே, அப்படியே