பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 12

இதுவும் ஆயிற்று என்று கொள்வதில் இழுக்கும் இன்றென அறிக. அம்மகளாரை,

  • மலைமான் மடங்தை மலர்ப்பாதம்

மறவா அன்பால் வந்தநெறி தலையாம் உணர்வு வந்தனையத்

தாமே அறிந்த அறிவுடையார்’

என்று சேக்கிழார் கூறுதலின், எல்லாம் அறிந்த காரணத்தால் ஐயம் இலராய் இருந்தனர் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டாய் நிற்கும் என்க. ஆகவே, சங்கிலியார் என்னும் பெயர் அவர்க்குக் காரணக்குறி என்று கொள்ளலாம்.

அம்மகளார் தம்மையொத்த சிறுமகளிர் சில ருடன் கூடி வண்டல் பயின்றும், தண்டலே ஆடியும் இன்புடன் வளர்வாராயினர். சங்கிலியார் ஆடற் பருவமும் கடந்து மனப்பருவம் நண்ணினர். தம் மகளா து உடற்பொலிவைக் கண்ட இருமுது குரவ ரும் உள்ளம் பூரித்தனர். தண்ணிசை யாழும், தாழ் கடல் தரளமும் (முத்தும்) மண்மிசைச் சாந்தமும் துய்ப்பார் அற்று வாளவிருப்பின், அவற்ருல் யாது பயன்? இசை வல்லான் யாழினே மீட்டினுல் அன்றி, பூண்பார் முத்தினேப் பூண்டால் அன்றி, பூசுவார் சாந்தினைப் பூசினுல் அன்றி, அவை பயனற்றுத் தம் பெருமையினை இழந்து நிற்கும் அல்லவோ ? ஆகவே, அவற்றை நன்முறையில் பயன்படுத்து வார்க்குப் பயன்படுத்துதல் அறிவுடைமை ஆதல் போலும். பருவமங்கையரைக் கடிமணம் புரிந்து கவினுறக் காண்டலே சீரிய முறையெனச் சிந்தித்த